மிதமான மழையோடு பலத்த காற்று... கூடவே குளிர் - எச்சரிக்கும் வானிலை மையம்
தமிழகத்தில் இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Recommended Video

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீடும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
குளிர் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரவில்லை. இன்னமும் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை
தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் தொடக்கத்தில் மழை வெளுத்து வாங்கியது. நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தென் மாவட்டங்களில் அணைகள் நிரம்பி வழிகின்றன. தென் மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சியோடு நெல் நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வெடுக்கும் மழை
கடந்த 3 வாரங்களுக்கு மேலாகவே மழை பெய்யவில்லை. வருணபகவான் ஓய்வெடுத்து வருகிறார். பருவமழைக்காலம் முடிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் ஆங்காங்கே கடந்த சில தினங்களாக மழை பெய்கிறது.

அதிகாலையில் குளிர்
பகல் நேரங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இரவிலும் அதிகாலையிலும் கடுங்குளிர் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் வங்கக் கடலில் மேற்கு திசையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
பலத்த காற்று
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஜனவரி 9,10 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

குளிர் 2 டிகிரி கூடும்
பருவமழைக்காலம் இன்னமும் முடியவில்லை. கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. இந்த சீசனுக்கு ஏற்ப இரவிலும், அதிகாலையிலும் குளிர் 3 டிகிரி அதிகரிக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications