லாரிகள் வேலை நிறுத்தம்... அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பில் விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே, தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தனர். அதன்படி நேற்றும் இன்றும் நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

Lorry owners are in Strike

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் விலக்கு, நாடு முழுவதும் ஒரே டீசல் விலை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசுக்கு 5000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lorry owners are in strike demanding exemption from GST and many more demands. Nearly 93 lakh lorries are in strike for two days.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற