For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுல் காந்தியான மு.க.ஸ்டாலின்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி பிற அரசியல் தலைவர்களைவிட மாறுபட்டு செயல்பட கூடியவர். ஏழை, எளியவர்களுடன் இறங்கி பழக கூடியவர் என்ற பெயர் உண்டு. தமிழகத்திலும், அதுபோல ஒரு தலைவர் களமாட தொடங்கியுள்ளார். அவர் வேறுயாருமல்ல, ராகுல் காந்தியை போலவே, அரசியல் பின்னணி கொண்ட, ஆண்ட குடும்பத்தில் இருந்து வந்த ஸ்டாலின்தான்.

ஆண்ட பரம்பரை

ஆண்ட பரம்பரை

ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை உண்டு. ராகுல் காந்தியின் கொள்ளுத்தாத்தா, பாட்டி, தந்தை ஆகியோர் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து நாட்டை பல ஆண்டுகாலமாக ஆட்சி செய்தவர்கள்.

ஸ்டாலினுக்கும் அப்படித்தான்

ஸ்டாலினுக்கும் அப்படித்தான்

ஸ்டாலினை பொறுத்தளவில் அவரது தந்தை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக பல்லாண்டுகளாக விளங்கிவருகிறார். 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்துள்ளார். காங்கிரசில், பிரியங்கா காந்தியை தவிர்த்து, அவரது சகோதரர் ராகுல் முன்னிலைப்படுத்தப்படுகிறார். திமுகவில் அழகிரியைவிட ஸ்டாலினுக்கே முக்கியத்துவம்.

ஏழை, எளியவர்களுடன்

ஏழை, எளியவர்களுடன்

இந்நிலையில்தான், ராகுல் காந்தியை போலவே, பிரச்சார யுக்தியையும் கையில் எடுத்துள்ளார், ஸ்டாலின். அரசியல்வாதிகள் என்றால் சாமானியர்கள் ரொம்பவே எட்ட நின்று பார்க்கும் நிலையை மாற்றும் வகையில், குடிசைகளுக்கே நேரடியாக செல்வது, களி சாப்பிடுவது, முதியோரை கட்டி பிடிப்பது என ராகுல்காந்தி கடந்த பல ஆண்டுகளாக பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளார்.

டீ சாப்பிட்ட ஸ்டாலின்

டீ சாப்பிட்ட ஸ்டாலின்

இதேபோலத்தான், ஸ்டாலினும் தனது யுக்தியை மாற்றி செயல்பட தொடங்கியுள்ளார். விலையுயர்ந்த பிரச்சார வேன்களிலும், கார்களிலும் பவனி வந்துகொண்டிருந்த ஸ்டாலின் தற்போது ஆட்டோவில் பயணிக்க தொடங்கியுள்ளார். சாதாரண ஹோட்டலில் டீ சாப்பிடுகிறார். ஸ்டாலின் மற்றும் ராகுல் பிரச்சாரத்திலுள்ள ஒற்றுமையை குறிப்பிட்ட சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் எனப்படும் போட்டோ கேலி சித்திரங்கள் உலாவருகின்றன.

மீம்ஸ்கள்

மீம்ஸ்கள்

இந்த மீம்ஸ்களில், ராகுல் காந்தி செய்த பல்வேறு பிரச்சார யுக்திகளையும், ஸ்டாலின் செய்யும் பிரச்சார யுக்தியும் ஒப்பிடப்பட்டுள்ளது. பாமகவின் அன்புமணி மாற்றம், முன்னேற்றம் என்ற போஸ்டர் அறிமுகம் செய்தபோது, அது ஓபாமாவிடமிருந்து கடன் வாங்கப்பட்டது என்று கேலி செய்தனர் திமுக விசுவாசிகள். இப்போது, ஸ்டாலின், ராகுல் காந்தியிடமிருந்து ஸ்டைலை கடன் வாங்கிவிட்டார் என்று பதிலுக்கு கேலி செய்கின்றனர் பாமக விசுவாசிகள்.

Image Courtesy: Facebook

English summary
DMKK treasurer M.K.Stalin does a Rahul Gandhi as he changed his campaign style like Rahul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X