For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்... அதிகரிக்கும் உயிர் பலிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகின்றன. வியாழக்கிழமை நடந்த விபத்து புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் பலர் உயிரிழந்துள்ளனர்.

குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியாவின் தேவையில் 90 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. பட்டாசு தொழிற்சாலையில் நேரடியாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் பட்டாசு தொழிலை சார்ந்தே உள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது.

Major fire accidents in Sivakasi

தீபாவளி பண்டிகை அன்று இனிப்பு, புத்தாடையோடு பட்டாசு வெடிப்பதில் தான் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதற்காக வித, விதமான பட்டாசுகளை தயாரித்து, ஆண்டுதோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பட்டாசுகளை விற்பனை செய்ய முறையான அனுமதி பெறவேண்டியது அவசியம்.

இதற்கென பின்பற்றவேண்டிய விதிமுறைகளை கடைகளின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனடியாக அதனை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியாவின் தேவையில் 90 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. பட்டாசு தொழிற்சாலையில் நேரடியாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் பட்டாசு தொழிலை சார்ந்தே உள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது.

Major fire accidents in Sivakasi

தீபாவளி பண்டிகை அன்று இனிப்பு, புத்தாடையோடு பட்டாசு வெடிப்பதில் தான் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதற்காக வித, விதமான பட்டாசுகளை தயாரித்து, ஆண்டுதோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பட்டாசுகளை விற்பனை செய்ய முறையான அனுமதி பெறவேண்டியது அவசியம்.

இதற்கென பின்பற்றவேண்டிய விதிமுறைகளை கடைகளின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனடியாக அதனை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு பட்டாசு தொழிற்சாலைகள் என சுமார் 900 உள்ளன. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் 850 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில், சிவகாசி தான் பட்டாசு தயாரிப்பின் அங்கமாக திகழ்வதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. மேலும், இங்கிருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

850 பட்டாசு ஆலைகளில் 164 பட்டாசு ஆலைகள் வருவாய் வட்டாட்சியரின் கீழும், 650 பட்டாசு தொழிற்சாலைகள் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியின் கீழும் உள்ளன.

முதலிபட்டி பகுதியில் மட்டும் தோராயமாக நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. அத்தனையும் எந்த நேரமும் வெடிவிபத்தை ஏற்படுத்தக் கூடிய மிக ஆபத்தான இரசாயனப் பொருட்களைக் கையாளும் ஆலைகள்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் பதினாறு படுக்கைகள் கொண்ட தீக்காய சிகிச்சைப் பிரிவு மட்டும் தான். ஆபத்து காலங்களுக்கு சிவகாசியிலிருந்தோ சாத்தூரிலிருந்தோ தான் தீயணைப்பு வண்டிகள் வர வேண்டும் என்பதுதான் சோகம். இன்று நடந்த விபத்து முதல் 2011ம் ஆண்டு வரை பல்வேறு வெடி விபத்துகள் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்துள்ளன.

Major fire accidents in Sivakasi

தொடரும் வெடி விபத்துகள் :

  • 2016 பிப்ரவரி மாதம் சிவகாசி அருகே உள்ள பூச்சக்காபட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது. 17 அறைகள் பலத்த சேதமடைந்தன. தீப்பொறி பறப்பதைப் பார்த்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்த தால் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.
  • கடந்த மே மாதம் சிவகாசியை அடுத்த டி.மானகசேரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர் 4 பேர் படுகாயமைடைந்தனர் அவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
  • கடந்த ஜூன் மாதம் சிவகாசி அருகே மாரனேரியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 அறைகள் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய 2 தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.
  • ஜூலை மாதம் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து நாசமானது. அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன.
  • அக்டோபர் 20 பட்டாசு கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
  • 2015 ஜூன் மாதம் வேலூர் குடியாத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • 2014ம் ஆண்டு சிவகாசி சுற்று வட்டாரப்பகுதிகளில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
  • விருதுநகர் மாவட்டம் கோனாம்பட்டி பராசக்தி பட்டாசு ஆலையில் 2013 ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து 2013 ஏப்ரல் 28ம் தேதி நாரணாபுரம் ரத்னா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியாகினர். 2013 மே மாதம் 15ம் தேதி நடந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 18 நாட்களில் 14 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சிவகாசி பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
  • 2012ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி முதலிப்பட்டியில் கடந்த நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 39 பேர் உடல் கருகி பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தமிழகத்தையே உலுக்கியது. அதே மாதம் 28ம் தேதி விஜயகரிசல்குளத்தில் வீட்டிற்குள் வைத்து பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர்.
  • 2011ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த விபத்தில் 21 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர், லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் சேதமடைந்தன.
  • தீபாவளி பண்டிகை தருணங்களில் புற்றீசல் போல் முளைக்கும் உரிய அனுமதி பெறாத பட்டாசு கடைகளை தடுப்பது அதிகாரிகளின் கடமை. ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் கடைகளை வைத்தால் மட்டுமே திடீர் விபத்து ஏற்படும் போது இழப்புக்கள் அதிகரிப்பதை தவிர்க்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
English summary
Here is a look at major fire accidents till date.People who make dazzling crackers in Sivakasi work in the most appalling conditions, which pose a constant threat to their lives. In the latest incident,6 people were killed and sevaral injured in the powerful explosion in Sivakasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X