கால்நடை மருத்துவ கலந்தாய்வுக்கு தாமதமாக வந்த அமைச்சரை முற்றுகையிட்ட மாணவர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கால்நடை மருத்துவ கலந்தாய்வுக்கு தாமதமாக வந்த அமைச்சரை மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அதில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

Minister Balakrishna Reddy blockaded

இதில் மாணவர்கள் கலந்து கொள்ள சென்றிருந்தனர். அப்போது அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்தாய்வுக்கு தாமதமாக வந்ததால் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரியும் மாணவர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
counselling for Veterinary medicine is conducting in vepery today. Minister Balakrishna Reddy arrived late for counselling, so the students blockaded the minister. -------- Vishnu Priya R
Please Wait while comments are loading...