வெற்றிவேல் சொல்வதைப் பார்த்தால் கூவத்தூரில் என்னென்னவோ நடந்திருக்கும் போலயே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கூவத்தூரில் எம்எல்ஏக்களை அழைத்துச் செல்லவில்லை என்றால் தமிழகத்தில் ஆதிமுக ஆட்சியே இருந்திருக்காது என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.

சென்னை அடையாற்றில் உள்ள அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வீட்டிற்கு எம்எல்ஏ வெற்றிவேல் சென்றார்.

அங்கு அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்பி அரி தான்தோன்றித்தனமாக பேசி வருவதை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும்.

கூவத்தூர் போகவில்லை என்றால்..

கூவத்தூர் போகவில்லை என்றால்..

தமிழக முதல்வர் நரசிம்ம ராவ் மாதிரி அமையாக ஏன் இருக்க வேண்டும்? கூவத்தூர் செல்லவில்லை என்றால் அதிமுக ஆட்சியே இருந்திருக்காது.

சசி கட்டுப்பாட்டில்..

சசி கட்டுப்பாட்டில்..

அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களுக்குத்தான் இந்தக் கட்சியும் கட்டுப்பட்டது. ஏனென்றால் அவர்தான் பொதுச் செயலாளர்.

உண்மைகளை சொல்லுவேன்

உண்மைகளை சொல்லுவேன்

கட்சியில் நடக்கும் சில விஷயங்களை வெளியே சொல்லக் கூடாது என்பதற்காக நான் அமைதியாக இருக்கிறேன். வெளியே சொல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு சென்றுவிடுவேன்.

பயமில்லை

பயமில்லை

ஏனென்றால் எனக்கு பயம் கிடையாது. காரணம் மடியில் கணம் கிடையாது. சசிகலா சிறையில் சந்தித்து தம்பிதுறை பாஜக வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக பேசியுள்ளார் என்று வெற்றி வேல் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If did not go to Koottur, the AIADMK regime would not be here, said MLA Vetrivel.
Please Wait while comments are loading...