For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாமதமாகும் தென் மேற்குப் பருவமழை - குற்றால சீசன் தொடங்குவது எப்போது?

Google Oneindia Tamil News

நெல்லை: இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் குற்றால சீசன் தொடங்குவதும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் நல்ல மழை இருக்கும். இந்த சீசன் காலத்தில் இதமான தென்றல் காற்றும் வீசும்.

Monsoon will be delayed by 5-9 days, says met centre

மேற்கு தொடர்ச்சி மலை பகுதி முழுவதும் மழை காரணமாக பசுமையாக காட்சியளிக்கும். இதனுடன் லேசான சாரலும் இருக்கும். இதை அனுபவிக்க இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு படையெடுப்பர். இந்த காலத்தில் வெயில் அரிதாகதான் இருக்கும்.

குற்றாலத்தில் கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி சரியான நேரத்தில் சீசன் தொடங்கியது. ஆனால் இந்தாண்டு வெறும் காற்று மட்டும் வீசுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் கடந்த ஆண்டு சரியாக நேரத்தில் சீசன் தொடங்கியதால் 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அருவிகளில் தொடர்ச்சியாக தண்ணீர் விழுந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் மழைக்கான அறிகுறி தென்படவில்லை. ஆனால் சீசன் காற்று அருமையாக உள்ளது. கோடை காலத்தில் அதிக மழை இருந்தால் குற்றாலத்தில் சீசன் குறித்த காலத்தில் துவங்காது என் மக்கள் கூறுகின்றனர்.

அதற்கேற்பது போல் இந்தாண்டு கோடை காலத்தில் அதிக நாட்கள் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சீசன் குறித்த காலத்தில் துவங்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குற்றாலத்தில் இந்த மாதம் கடைசி வாரம் சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The delay in the onset of the south west monsoon over Goa is likely to be five to nine days, as the meteorological centre at Altinho has predicted its commencement after June 12 or later.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X