14 மடங்கு பெரியது.. 30 மடங்கு அதிக வெளிச்சம்.. புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  புத்தாண்டில் தோன்றிய அதிசய நிலவு- வீடியோ

  சென்னை: புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலாவை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

  2018ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் Super Blue Blood நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி ஒன்று மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்றும் என நாசா ஏற்கனவே அறிவித்திருந்தது.

  அதன்படி நேற்று பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. மாதத்துக்கு ஒரு முறை வானில் தோன்றும் பவுர்ணமி என்னும் முழுநிலா எப்போதாவது ஒரு முறை பெரிய அளவில் தெரியும்.

  நேற்று சூப்பர் நிலா..

  நேற்று சூப்பர் நிலா..

  பவுர்ணமி நாளில் நிலா பூமிக்கு அருகில் வரும்போது சூப்பர் நிலா என்றழைக்கப்படுகிறது. வான அறிவியல் கணக்குப்படி விண்ணில் உள்ள கோள்கள் சூரியனையும், அதன் பால்வழிப்பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

  நேர்க்கோட்டில் வரும்போது

  நேர்க்கோட்டில் வரும்போது

  அதுபோல நிலவும் பூமியை சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வர 29.32 நாட்கள் ஆகிறது. பூமி சூரியனைச்சுற்றிவர 365.256 நாட்கள் ஆகிறது. இந்த கணக்கின்படி பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலவும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பெரிய நிலா என்று அழைக்கப்படும் சூப்பர் நிலா தோன்றுகிறது.

  மேகமூட்டத்தால்..

  மேகமூட்டத்தால்..

  கடந்த மாதம் 4ம் தேதி இதுபோன்ற பெரு நிலவு தோன்றியது. அப்போது வானம் மேகமூட்டமாக இருந்ததால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணமுடியாமல் போனது.

  30 மடங்கு அதிக வெளிச்சம்

  30 மடங்கு அதிக வெளிச்சம்

  இந்நிலையில் 2018ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று வானில் சூப்பர் நிலா தோன்றியது. இது வழக்கத்தை 14 மடங்கு பெரியதாகவும், 30 மடங்கு அதிக வெளிச்சமாகவும் இருந்தது.

  இன்றும் காணலாம்

  இன்றும் காணலாம்

  நேற்றைய சூப்பர் நிலாவை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கோளரங்கில் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் சூப்பர் நிலாவை கண்டுகளித்தனர். இந்த சூப்பர் மூனை இன்றும் வானில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  31ஆம் தேதி சந்திர கிரகணம்

  31ஆம் தேதி சந்திர கிரகணம்

  இந்த ஜனவரி மாதத்தில் நேற்று ஒரு பவுர்ணமியும், வரும் 31ம் தேதி ஒரு பவுர்ணமியும் வருகிறது. நேற்று சூப்பர் நிலா தோன்றிய நிலையில் வரும் 31ஆம் தேதி வரும் வரும் பவுர்ணமியின் போது சந்திரகிரகணம் ஏற்பட உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  New years first super moon apeared yesterday. The moon was brightest and bigger than usual. In Chennai planetorium lots of prople enjoyed this super moon.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X