ஜெயங்கொண்டத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ஆண்குழந்தை... பிறந்த 15 நிமிடத்தில் வீசிச் சென்ற பெண்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 நிமிடங்களில் ஆண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமணையில் கழிவு பொருட்களை போடுவதற்காக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துமனையில் உள்ள பாத்ரூம் அருகே இருந்த குப்பை தொட்டி அருகே பிறந்து 15 நிமிடங்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் கிடந்துள்ளது.

Newborn baby thrown into dustbin at Jayankondam

குழந்தையின் அழுகுரல் கேட்ட அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர் ஜெயங்கொண்டம் போலிசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்

மருத்துவமனை வளாகத்திலேயே குப்பை தொட்டியில் ஆண் சிசு உயிருடன் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைக்கு வெளியே பிரசவித்த பின்னர் குழந்தையை பெண் குப்பைத் தொட்டியில் வீசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Newborn boy baby is found abandoned covered in the dustbin of Ariayalur district Jayankondam's government hospital and police in search of the baby's parents.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற