For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியைச் சந்தித்தார் சிதம்பரம்... பணஒழிப்பின் பாதகங்களை விளக்கினார்!

By Shankar
Google Oneindia Tamil News

பிரதமர் மோடி 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு திடீரென அறிவித்ததும், புதிய இந்தியா பிறந்தது என முதல் ஆளாய் வாழ்த்துச் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஆரம்பத்தில் இதற்கு எதிர்வினை ஏதுமில்லை. ஆனால் நான்கைந்து நாட்கள் மக்கள் வங்கி, ஏடிஎம் வாசல்களில் வரிசையில் நின்று மயங்கி சுருண்டு விழுந்து செத்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த பண ஒழிப்பின் பாதகங்கள் நாட்டையே அதிரச் செய்தது.

P Chidambaram meets Rajini and explain the negative effects of demonetisation

உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து, 'என்னதான் நடக்கிறது நாட்டில்.. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்... ஏன் பண அளிப்பை சீராக்கவில்லை?' என்று மத்திய அரசைக் கேட்டது. ஆனால் வழக்கம்போல மெத்தனமான ஒரு பதிலைச் சொல்லி தப்பி வந்தது மோடி அரசு.

பண ஒழிப்பின் பாதிப்பு 50 நாட்களில் சரியாகிவிடும். அதன் பிறகு நாடும் நாட்டு மக்களும் அடையப் போகும் நன்மைகள் கொஞ்சமல்ல என்று மோடி வாக்குறுதி அளித்திருந்தார். 50 நாட்களுக்குப் பிறகு பலன்கள் கிடைக்காவிட்டால் நான் தூக்கில் தொங்குவேன் என்று வேறு உணர்ச்சி வசப்பட்டிருந்தார் மோடி. அவர் சொன்ன 50 நாட்கள் முடிய இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளன. இந்த இரண்டு நாட்களுக்குள் அப்படி என்ன மாறுதல்கள் வரப்போகின்றன என்று தெரியவில்லை.

இந்த சூழலில்தான் நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம்.

இரு தினங்களுக்கு முன்பு ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, தற்போதைய தமிழக மற்றும் இந்திய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

நாட்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எழுந்துள்ள பிரச்சனைகள், மக்கள் படும் அவதிகள் குறித்து ரஜினிகாந்திடம் ப.சிதம்பரம் விவரித்தபோது, தாமும் நிறைய விஷயங்களை கேள்விப்படுவதாகவும், ஊடகங்களில் கவனிப்பதாகவும் ரஜினிகாந்த் கூறினாராம்.

பண ஒழிப்பு நடவடிக்கையால் மக்கள் படும் அவதிகளைப் பார்த்து மிகுந்த வருத்தப்படுவதாக ரஜினி தெரிவித்தாராம்.

English summary
Sources say that former Finance Minister P Chidambaram was met actor Rajinikanth at his Poes Gargen residence and explained the negative effects of Modi's Demonetisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X