For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஏஓ முதல் முதல்வர் வரை எங்கு பார்த்தாலும் ஊழல்... ஆளுநரிடம் ஆதாரம் தந்த அன்புமணி!

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் முதல் முதல்வர் வரை அனைத்திலும் ஊழல் திளைத்திருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    விஏஓ முதல் முதல்வர் வரை எங்கு பார்த்தாலும் ஊழல்... ஆளுநரிடம் ஆதாரம் தந்த அன்புமணி!- வீடியோ

    சென்னை : தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் முதல் முதல்வர் வரை அனைத்திலும் ஊழல் திளைத்திருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அன்புமணி இன்று நேரில் வழங்கினார்.

    இதற்குப் பின்னர் ராஜ்பவன் வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது. : தமிழக ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளேன், அதனை வரிக்கு வரி படிப்பேன் என்று ஆளுநர் கூறி இருக்கிறார். அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று ஆளுநர் உறுதியளித்திருக்கிறார். இதே போன்ற அறிக்கையை முன்னாள் ஆளுநர் ரோசய்யாவிடம் கொடுத்தோம், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அப்போதே ஆளுநர் ரோசய்யா நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழகம் இன்று இந்த மோசமான நிலைக்கு சென்றிருக்காது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    24 குற்றச்சாட்டுகள்

    24 குற்றச்சாட்டுகள்

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது. கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி முதல்வர் வரை ஊழலில் ஊறி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நாங்கள் சொன்ன ஊழல் பட்டியலில் 24 ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறோம்.

    வருமானம் இல்லை

    வருமானம் இல்லை

    அதில் முக்கியமானது மணல் கொள்ளை. 2003ல் ஜெயலலிதா ஆட்சியில் மணலை அரசுடைமையாக்கிய பிறகு 2017 வரை தமிழக அரசுக்கு வெறும் 2 ஆயிரம் கோடி ரூபாய் தான் வருமானம். ஆனால் ஆண்டுதோறும் மணலால் ஊழல் நடப்பது 25 ஆயிரம் கோடி, இதற்கான விவரங்களை கொடுத்திருக்கிறோம்.

    மணல் விற்பனையால் இழப்பு

    மணல் விற்பனையால் இழப்பு

    குவாரிகளில் 2 யூனிட் மணலை ரூ. 800க்கு அரசு விற்கிறது ஆனால் பொதுமக்களுக்கு 2 யூனிட் மணல் 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரு, கேரளாவிற்கு 50 முதல் 55 ஆயிரம் ரூபாய் வரை என விற்பனை செய்தவற்காக கடத்துகிறார்கள். மணல் விற்பனையில் மட்டும் அரசுக்கு நான்கரை லட்சம் இழப்பீடு ஏற்படுகிறது.

    ஏன் வருமானம் இல்லை?

    ஏன் வருமானம் இல்லை?

    48 குவாரிகளில் 88 கோடி வருமானம் வந்ததாக முதல்வர் பழனிசாமி அறிக்கை அளித்துள்ளார். 24 நாட்களில் 35 கோடி வருமானம் வந்ததாக அவருடைய பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். 24 நாளில் இவ்வளவு வருமானம் என்றால் அரசால் மட்டும் ஏன் வருமானம் பார்க்க முடியவில்லை. இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ தான் விசாரணை நடத்த வேண்டும்.

    தாதுமணல் விற்பனையில் நஷ்டம்

    தாதுமணல் விற்பனையில் நஷ்டம்

    தாதுமணல் விற்பனையில் 10 ஆண்டுகளில் 40 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதே போன்று மின்சாரத்துறை, சுகாதாரத்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக அன்புமண் கூறினார்.

    English summary
    PMK youth wing leader Anbumani Ramadoss submitted a report of loots in Tamilnadu government's 24 departments with evidences to governor Banwarilal purohit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X