For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம்.. சட்டசபை வளாகத்தில் போலீஸ் குவிப்பு..! பரபரப்பு!

சசிகலா கும்பலால் எம்எல்ஏக்கள் விலை பேசப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சட்டசபையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் சசிகலா கும்பலால் எம்எல்ஏக்கள் விலை பேசப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சட்டசபையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாக செயல்படத் தொடங்கினார் ஓபிஎஸ். இதைத்தொடர்ந்து சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்லவே அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது எம்எல்ஏக்களின் ஆதரவுக்காக சசிகலா கோஷ்டி எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கொடுத்ததாக ஓபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏவான சரவணன் கூறிய வீடியோக் காட்சி வெளியிடப்பட்டது. இது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

புகாருக்கு மறுப்பு

புகாருக்கு மறுப்பு

ஆனால் இதனை புகாருக்குள்ளான எம்எல்ஏக்கள் மறுத்தனர். வீடியோவில் இடம்பெற்றிருந்த எம்எல்ஏ சரவணனும் மறுத்தார்.

முடிவோடு இருக்கும் எதிர்க்கட்சிகள்

முடிவோடு இருக்கும் எதிர்க்கட்சிகள்

இந்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியுள்ளது. இதில் எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்ட விவகாரத்தை பூதாகரமாக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

வழக்கு தொடர்ந்த திமுக

வழக்கு தொடர்ந்த திமுக

சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் செவ்வாய்க்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோர்ட்டில் வலியுறுத்தப்பட்டது.

போலீசார் குவிப்பு

போலீசார் குவிப்பு

ஊழலில் திளைத்த அ.தி.மு.க அரசு இனியும் நீடிக்கக்கூடாது என திமுக வலியுறுத்தி வருகிறது. பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான திமுக இப்பிரச்சனையை இன்று சட்டசபையில் எழுப்பும் என்பதால் சட்டசபை வளாகத்தின் 4வது நுழைவாயிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது பெரும் அமளிதுமளி ஏற்பட்டு சட்டை கிழிப்பு சம்பவங்களும் அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தொடரின் போதும் மோதல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.

English summary
Police have deployed in Tamilnadu assembly fourth gate today. to precaution act Police have deployed in the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X