ரவுடி பினுவை சுட்டு பிடிக்க சேலத்தில் சல்லடை போடும் சென்னை போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சினிமா பாணியில் கொலை செய்யும் பினு...அதிரவைக்கும் கொடூர தகவல்கள்!- வீடியோ

  சென்னை: பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் திரண்ட ரவுடிகளை சுற்றி வளைத்த போது தப்பி ஓடிய ரவுடி பினு உள்பட 3 ரவுடிகளை சுட்டு பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ரவுடி பினு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரும் இவரது கூட்டாளிகளும் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர்.

  Police plans for encounter Rowdy Binu and his aides

  இந்நிலையில் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் பினுவின் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக திரண்ட அவரையும், அவரது கூட்டாளிகளையும் போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது ரவுடி பினு, கணுகு உள்பட 3 பேர் போலீஸாரிடம் இருந்து தப்பிவிட்டனர்.

  ரவுடி பினு சேலத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. சேலத்தில் மருத்துவர் ஒருவர் பினுவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக போலீஸுக்கு தகவல் கிடைத்துள்ளது. பினு கேரளத்துக்கு தப்பாமல் இருக்க போலீஸார் அவரை தேடி வருகின்றனர். மேலும் பினுவையும் அவருடன் தப்பி சென்றவர்களையும் சுட்டு பிடிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Police searches and goes for Salem to catch Rowdy Binu and his aides who escaped from their arrest. Now Police plans for encounter Rowdy Binu and his aides.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற