சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி மீண்டும் டெல்லி புறப்பட்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

  ராணுவ தளவாட கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை- வீடியோ

  சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி மீண்டும் டெல்லி புறப்பட்டார்.

  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.

  Prime Minister Modi return back to Delhi

  இதைத்தொடர்ந்து சென்னை ஐஐடி மற்றும் அடையாறு புற்றுநோய் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

  தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

  இந்நிலையில் பிரதமர் மோடியின் இன்றைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பினர் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை முதலே சென்னை முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.

  இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி விமானம் டெல்லி மீண்டும் டெல்லி புறப்பட்டார். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதைக் கண்டித்து பிரதமர் உட்பட பாஜகவினர் இன்று உண்ணாவிரதம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Prime Minister Modi return back to Delhi after completing his Chennai program.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற