வைகை செல்வன் ஒரு அழுகிய தக்காளி... சீக்கு வந்த பிராய்லர் கோழி - ராஜேந்திர பாலாஜி தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அம்மா அணியில் உள்ள வைகை செல்வன் ஒரு அழுகிய தக்காளி,சீக்கு வந்த பிராய்லர் கோழி என்று அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும், அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கும் ஏழாம் பொருத்தம். பால் கலப்பட பிரச்சினையில் அது பகிரங்கமாகவே வெடித்துள்ளது.

ராஜேந்திரபாலாஜியை வைகை செல்வன் தாக்கி பேச... அதற்கு வைகை செல்வன் பதிலடி கொடுக்க என மாறி ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொள்கின்றனர்.

பால்கலப்படம்

பால்கலப்படம்

தனியார் பால் பவுடரில் ரசாயனப்பவுடர் கலக்கப்படுகிறது என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆதாரப்பூர்வமாக லேப் ரிசல்ட் பேப்பர் ஜெராக்ஸ் காப்பிகளை கொடுத்தார்.

ஆவின் பால் தரமானது

ஆவின் பால் தரமானது

ஆவின் பால், தயிர் என எதிலுமே கலப்படம் செய்யப்படுவதில்லை என்றும் கூறிய ராஜேந்திர பாலாஜி, மக்கள் எவ்வளவு கேட்டாலும் தர தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

வைகை செல்வன்

வைகை செல்வன்

திடீரென்று ஒரு நிருபர், வைகை செல்வனின் பால்கலப்படம் பற்றிய பேட்டியை பற்றி கேட்டார். அதற்கு கோபமடைந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் ஒரு சீக்கு பிடிச்ச பிராய்லர் கோழி என்றார்.

அழுகிய தக்காளி

அழுகிய தக்காளி

அதோடு விட்டால் பராவாயில்லை. வைகை செல்வன் ஒரு அழுகிய தக்காளிப்பா... அது சாப்பிடவும் உதவாது... சாம்பாருக்கும் உதவாது என்று காட்டமாக கூறினார்.

பெண் விசயம்

பெண் விசயம்

வைகை செல்வனுக்கு பதவி எப்படி போனது தெரியுமா? பெண் விசயத்தில் அவர் தவறாக நடந்து கொண்டதால் அவர் பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறினார். நேற்று ராஜேந்திரபாலாஜியை போட்டு தாக்கினார் வைகை செல்வன். இப்போது வைகை செல்வனை போட்டு கடித்து மென்று துப்பியுள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இது எங்க போய் முடியுமோ?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Milk Minister K D Rajendra Balaji attacks on ADMK Amma team party spokes person Vaigai selvan.
Please Wait while comments are loading...