For Quick Alerts
For Daily Alerts
காஞ்சி மடத்தின் மூத்த பீடாதிபதி ஜெயேந்திரருக்கு ரஜினிகாந்த் இரங்கல்
சென்னை: காஞ்சி மடத்தின் மூத்த பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திரருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை திடீரென ஜெயேந்திரருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சங்கரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சங்கர மடத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஜெயேந்திரருக்கு ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், பூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்த இந்த நாளில், அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!