For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு- குட்டி கதை மூலம் விளக்கிய ரஜினி

ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!-வீடியோ

    சென்னை: ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு என்று சென்னையில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகத்துக்கு வெளிநாட்டை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டம் வழங்கியது. இதை முன்னிட்டு அவருக்கு தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில் ஏ.சி. சண்முகத்தின் நண்பர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஏழைகள்

    ஏழைகள்

    அப்போது விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் என்னதான் உழைப்பு, விடாமுயற்சி, அதிர்ஷ்டம் என இருந்தாலும் கடவுள் அருள் இருந்தால் மட்டுமே யாரும் முன்னேற முடியும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் சேவை.

    சுத்தமாக இருக்க வேண்டும்

    சுத்தமாக இருக்க வேண்டும்

    ஆண்டவன் அருள் மட்டும் இருந்தால் போதாது. நமக்கு நல்ல எண்ணம் வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். மனம் போன போக்கில் போகக் கூடாது. நம் உடலை சுத்தமாக வைத்து கொண்டால், மனமும் சுத்தமாக இருக்கும் என்றார்.

    போகும் வழியில்

    போகும் வழியில்

    இதனை ஒரு குட்டி கதை மூலம் ரஜினி விளக்கினார். அவர் கூறுகையில் பரமஹம்சர் ஒரு நாள் காசிக்கு செல்ல நினைத்தார். அதற்காக தான் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து கொண்டு காசிக்கு புறப்பட்டார். போகும் வழியில் சில ஏழைகளை கண்டறிந்தார்.

    உதவி செய்வது இறை தொண்டு

    உதவி செய்வது இறை தொண்டு

    அப்போது அவர்களுக்கு அந்த பணத்தை செலவு செய்தார். அதன் வழியாக அவர்கள் முகத்தில் இறைவனை கண்டு காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டாக கூறினார். எனவே ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு என்றார்.

    English summary
    Rajinikanth says that helping poor people is service done to the God. He says that if we clean the body, then our soul will also be cleaned.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X