For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லா கட்சிகளும் கத்திரிக்காய் சாகுபடி செய்கின்றன ராமதாஸ் “கண்டுபிடிப்பு”

Google Oneindia Tamil News

Ramadoss comments on election alliance
சென்னை: பாமக சார்பில் 12வது நிழல் நிதி நிலை அறிக்கையை இன்று வெளியிட்ட டாக்டர் ராமதாஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு எல்லாக் கட்சிகளுமே கத்திரிக்காய்தான் சாகுபடி செய்கின்றன என்று கூறினார்.

தேமுதிகவையும், பாமகவையும் ஒரே கூட்டணியில் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது.பேச்சுவார்த்தை என்ன நிலைமையில் இருக்கிறது. தேமுதிக இருக்கும் கூட்டணியில்பாமக சேர விருப்பம் உண்டா? என்ற கேள்விக்கு, உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்கப் போவதில்லை என்றார்.

தேமுதிக இடம் பெறும் அணியில் பாமக இடம்பெறுமா? தேமுதிகவை கடுமையாகவிமர்சித்திருக்கிறீர்கள். ஒரு நடிகர் பின்பு போகலாமா என்று பொதுக்கூட்டங்களில்பேசியிருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இந்த கேள்வியை அவரிடம் கேட்டிருக்கலாமே. இந்த மாதிரி கேள்விகள் கேட்பீங்கன்னுஇங்க வந்த பிறகுதான் எனக்கு தெரியுது. ஆனால் இதற்கு என்ன பதில் சொல்லுவதுஎன்று தான் எனக்கு தெரியவே இல்லை என்றார்.

கூட்டணி குறித்து பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக பாஜக கூறியிருக்கிறதேஅதனால்தான் கேட்கிறோம் என்றதற்கு கத்திரிக்காய் விளைந்தால் கடைக்குவந்துதானே ஆகவேண்டும் என்று கூறினார்.

கத்திரிக்காய் பயிரிடப்பட்டுவிட்டதா?என்றதற்கு, எல்லா கட்சியும் கத்திரிக்காய் பயிரிடுது என்று பதில் அளித்தார்.

English summary
PMK released its 12th shadow budget today. After that PMK’s founder Dr.Ramadas spoke about the alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X