தமிழக அரசின் கடன் சுமை ரூ. 3.14 லட்சம் கோடி - ரூ41,965 கோடி கடன் வாங்க திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் கடன் சுமை 3,14,366 கோடியாக உள்ளது என்று 2017 -18 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார்.

அப்போது அவர் தமிழக அரசின் கடன் 1 லட்சம் கோடி அதிகரித்து 3,14,366 கோடியாக உள்ளது என்றார். தமிழக அரசின் கடன் ரூ.1 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். 2017 - 18-ம் ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை ரூ.41, 977 கோடியாக உள்ளதாக குறிப்பிட்டார்.

2017-18 ல் வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடியாக இருக்கும் என்றும் குறிப்பிட்ட ஜெயக்குமார் மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி என்றார்.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

தமிழக பொருளாதார வளர்ச்சி 6.5% இல் இருந்து 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

கடன் சுமை

கடன் சுமை

தமிழக அரசின் கடன் 1 லட்சம் கோடி அதிகரித்து 3,14,366 கோடியாக உள்ளது என்று கூறிய ஜெயக்குமார், மேலும் ரூ41,965 கோடி கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். இந்த நிதியாண்டு இறுதிக்குள் தமிழக அரசின் கடன் சுமை ரூ. 4 லட்சம் கோடியை எட்டி விடும்.

திவாலாகும் தமிழகம்

திவாலாகும் தமிழகம்

தமிழகம் திவாலாகிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தலைவர்கள் புகார் கூறிவருகின்றனர். அது உண்மைதான் என்பது போல தமிழகம் பெருங்கடன்கார தேசமாக உருவெடுத்துள்ளது. இலவச திட்டங்களுக்காகவே இப்படி கடனுக்கு மேல் கடனாக வாங்கிக்கொண்டிருக்கிறது தமிழகம்.

பற்றாக்குறை

பற்றாக்குறை

தமிழக அரசு ஓடிக் கொண்டிருப்பது என்பது டாஸ்மாக்கினால் மட்டுமே... டாஸ்மாக் வருவாய் மட்டும்தான் தமிழக அரசுக்கு உருப்படியாக கிடைக்கும் வருமானம். 2017-18 ல் வருவாய் பற்றாக்குறை ரூ.15,931 கோடியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் நிதியமைச்சர் ஜெயக்குமார். மொத்தத்தில் தனது முதல் பட்ஜெட்டை பற்றாக்குறை பட்ஜெட் ஆக தாக்கல் செய்துள்ளார் ஜெயக்குமார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu Finance Minister presenting 2017 -2018 budget in state assembly. Rs. 3,14,366 crore in the debt burden of the state in the year.
Please Wait while comments are loading...