காவிரி வழக்கில் தீர்ப்பு வரும் வரை 2,000 கன அடிநீரை தமிழகத்துக்கு திறக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பது குறித்த தீர்ப்பு வரும் வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 2,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகளை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.என்.கான்வால்கர் ஆகி யோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

SC asks Karnakata to release 2,000 Cusecs

இந்த இவ்வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை தமிழகத்துக்கு கர்நாடகா வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இன்று இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

அத்துடன் தீர்ப்பு வரும் வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 2,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் நேற்றுகூட இதேபோல் காவிரி நீரைத் திறக்க உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா தொடர்ந்தும் காவிரி நீரை திறந்துவிட முடியாது என பிடிவாதம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Supreme Court has asked Karnataka to continue supplying 2,000 cusecs of Cauvery river water to TamilNadu everyday till further orders.
Please Wait while comments are loading...