For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவியல் குவியலாக சிக்கிய குண்டுகள்... கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு

Google Oneindia Tamil News

கூடங்குளம்: கூடங்குளம் அருகே கடற்கரை கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு குவியல்கள் போலீசாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதனால் கூடங்குளத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தன்குழியில் இரு பிரிவு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் நடப்பது வாடிக்கை. அப்போது இரு பிரிவு மீனவர்களும் ஓருக்கொருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவர். இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு திருமண் வீட்டில் நடந்த தகராறு தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

Security beefed up in Kudankulam atomic power plant

இது தொடர்பாக எஸ்பி விக்ரமன் தலைமையிலான போலீசார் விரைந்து அங்கு விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் வாகனம் மீதும் நாட்டு வெடிகுண்டுகள் வீசபபட்டது. இதையடுத்து வெகுண்ட போலீசார் கிராமம் முழுவதும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களிடம் சிக்காமல் இருக்க படகுகளில் ஏறி கடலுக்குள் தப்பி சென்றனர். அவர்கள் இதுவரை ஊர் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கடற்கரையில் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியதில் கடற்கரை மணலில் புதைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் பல பிடிப்பட்டன.

இந்த சண்டை தற்காலிகமா்க ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் மிகப்பெரிய தாக்குதல் நடக்கலாம் என ரகசிய தகவல் எஸ்பிக்கு கிடைத்தது. இதையடுத்து மீண்டும் களத்தில் குதித்த போலீசார் கடற்கரையில் சந்தேகப்படும் இடங்களில் எ்ல்லாம் தோண்டி பார்க்க ஆரம்பித்தனர். அப்போது கடற்கரை மணலிலும் உடை மரஙகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் குவியல் குவியலாக சிக்கியதால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கூடங்குளத்தில் அணு மின் நிலையம் செயல்பட்டு வருவதால் போலீசார் உஷார்படுத்ப்பட்டுள்ளனர். கூத்தன்குழியில் வெடிகுணிடுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது இது 13வது முறையாகும். ஜாங்கிட் எஸ்பியாக இருந்த காலகட்டத்தில் நாட்டு வெடிக் குண்டுக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிர முயற்சி எடுத்தார். ஒரு முறை அவர் சோதனை நடத்தியதில் 1000 நாட்டு வெடிகுண்டுகள் வரை குவியல் குவியலாக கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி இப்பகுதியில் வெடிகுண்டுகள் புழங்கி வருவதால், இதைத் தயாரிக்க இவர்களுக்கு மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது, இது குறித்து போலீசார் ஏன் விரிவான விசாரணை நடத்தவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இ்ங்கு அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடப்பதும், நூற்றுக்கணக்கில் வெடிகுண்டுகள் சிக்குவதும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூடங்குளம் அணு மின் நிலைய வாளக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Security has been beefed up in Kudankulam atomic power plant as hundreds of countra bombs were seized recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X