அனுமதியின்றி ட்ரெக்கிங் செல்வதை வனத்துறையில் சோதனை செய்ய ஆட்கள் இல்லையா? சீமான் கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுமதியின்றி ட்ரெக்கிங் செல்வதை சோதனை செய்ய வனத்துறையில் ஆட்கள் இல்லையா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ட்ரெக்கிங் சென்ற 10 பேர் காட்டுத் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 6க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களில் 8 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீமான் கேள்வி

சீமான் கேள்வி

இந்நிலையில் குரங்கணி தீ விபத்து குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மலையேற்றத்திற்கு அனுமதியின்றி சென்றார்கள் என்றால் வனத்துறையில் சோதனை செய்ய ஆட்கள் இல்லையா? என அவர் கேள்வி எழுப்பினார்.

நியூட்ரினோ திட்டம்

நியூட்ரினோ திட்டம்

குரங்கணி தீ விபத்தால் வனப்பகுதிக்குள் யாரையும் செல்ல விடாமல் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவார்கள் என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.

பொறுப்பற்ற பதில்

பொறுப்பற்ற பதில்

இயற்கையாக தீப்பற்றினால் அணைப்பதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லையா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். மலையேற்றத்திற்காக சென்றவர்கள் அனுமதியின்றி அரசு கூறுவது பொறுப்பற்ற பதில் என்றும் சீமான் தெரிவித்தார்.

ரஜினி வரமாட்டார்

ரஜினி வரமாட்டார்

பேரிடர் காலங்களில் தற்காப்புக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் ரஜினி குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், ரஜினி கருத்து கூறாமல் நழுவியும் போவார், போராடவும் வரமாட்டார், அறிக்கையும் விடமாட்டார் என்று விமர்சித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NTK party Chief coordinator Seeman has arrises many questions on Kurangani forest fire.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற