For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ள நேரத்தில் பாதுகாப்பாக இருக்க சில எளிய வழிகள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் பாதுகாப்பாக இருக்க சில எளிய விஷயங்களை செய்தால் போதும்.

கடந்த 1ம் தேதி சென்னையில் பேய் மழை பெய்தது. இதில் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மீண்டும் வெள்ளக்காடானது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் மொட்டைமாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல், இரண்டாவது தளத்தில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கெடுக்காது என்று தைரியமாக இருந்த மைலாப்பூர் மக்களை நேற்று வெள்ளம் கலங்க வைத்துவிட்டது.

உங்கள் பகுதியில் வெள்ளம் வந்துவிடும் என்றோ, நீரின் அளவு அதிகரிக்கும் என்றோ நினைத்தால் இதை செய்யுங்கள்,

பாக்கெட் உணவு, பால் பாக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள், பிரெட், பிஸ்கெட்டுகளை பத்திரப்படுத்துங்கள், பாரசிட்டமால், இருமல் மருந்து, குளுகோஸ் உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.

முதலுதவி பெட்டி கட்டாயம் இருக்கட்டும். முக்கிய ஆவணங்களை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்துக் கொள்ளவும், வீட்டில் விரிசல் விழுந்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேறவும். வெள்ளம் தேங்கியுள்ள இடத்தில் நடந்து செல்ல வேண்டாம்.

English summary
Following some simple steps like keeping packaged food, biscuits, milk, bread and medicines can be very helpful at this time of flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X