• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்படி இருந்த ரஜினி, இப்படி ஆயிட்டாரே! ஜெ.,க்கு கடிதம் எழுதி, வலைத்தளங்களில் வறுபடும் சூப்பர் ஸ்டார்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்துள்ளதற்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதுதான், இப்போது தமிழ் சோஷியல் மீடியாக்களின் ஹாட் டாப்பிக். அஞ்சான் ஃபிளாப் ஆன பிறகு, லிங்குசாமியையும், கத்தி டீசர் வெளியான பிறகு நடிகர் விஜயையும் ஓட்டிக்கொண்டிருந்த சமூக வலைத்தளவாசிகள், இப்போது சூப் போட்டு குடித்துக் கொண்டிருப்பது சூப்பர் ஸ்டாரைத்தான்.

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய டயலாக்கை ஒப்பிட்டு இப்படி, விளாசுகின்றனர் தமிழ் டிவிட்டர் பிரபலங்கள். அதுகுறித்த ஒரு தொகுப்பு இதோ..

நரம்பில்லா நாக்கு

தமிழ் டிவிட்டர் பிரபலங்களில் ஒருவரான சி.பி.செந்தில்குமாரின் கருத்து இது. நரம்பில்லாத நாக்கு அப்படியும், இப்படியும் பேசுகிறது என ரஜினியின் ஜெயலலிதா குறித்த பழைய மற்றும் இப்போதைய கருத்தை ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார். அதை ரஜினியின் படத்தையே டி.பி.யாக வைத்திருக்கும் ஜே கே என்ற ஒரு நண்பர், எலும்பில்லாத நாக்கு என திருத்தியுள்ளார்.

யாரு தெரியுமா சூப்பர் ஸ்டாரு?

சூப்பர் ஸ்டார் யாரு தெரியுமில்ல.. கழுவுற மீனுல நழுவுற மீனு அப்படீங்கிறது சின்ன குழந்தைக்கு கூட தெரியும் என்று கூறுகிறது ஆழ்வார்க்கடியானின் இந்த டிவிட்.

போரு.. பேரு..

சிவாஜி படத்தில் ஊழலுக்கு எதிராக, கருப்பு பணத்துக்கு எதிராக போராடுவதாக ரஜினி பஞ்ச் பேசியதை விசிலடித்து ரசித்த ரசிகர் கூட்டம், இப்போதும் ரசிப்பதை நா.குமரேசன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

லீவு லெட்டர்

எழுத்தாளரும், தமிழ் டிவிட் பிரபலமுமான (தோட்டா) ஆல்தோட்ட பூபதி கருத்து இது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. ஜெயலிலதா வெளியே வந்துள்ள நிலையில் அதற்காக கோபப்பட்டுவிடுவாரோ என்று நினைத்து கடிதம் எழுதியுள்ளார். இது ஒரு லீவ் லெட்டர் என நெற்றிப்பொட்டில் அடித்துள்ளார்.

ஜெயலலிதாவை ஏற்றவர்கள் ரஜினியையும்..

ஜெயலலிதாவை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதை போல, ரஜினி அந்தர் பல்டி அடித்துக்கொண்டிருப்பதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள் என்கிறார் UKG என்ற இந்த டிவிட்டர்.

இப்போ விஜய் டர்ன்

தமிழ் டிவிட்டர் பிரபலங்களில் ஒருவரான கருத்து கந்தன் உதிர்த்த கருத்து இது. ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்துள்ளதால் ரஜினி எப்படி கடிதம் எழுதி நல்ல பிள்ளையாக காட்டிக்கொண்டாரோ, அதேபோல, விஜய் படம் ரிலீசாக வேண்டுமே என்கிற கவலையில் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் கடிதம் எழுதி போஸ்ட்பாக்ஸ்சில் போட்டிருப்பார் என்கிறது இந்த டிவிட்.

அய்யோ முடியலப்பா சாமி..

ஒவ்வொரு பட ரிலீசின்போதும் ரஜினிகாந்த் படத்தின் புரமோஷனுக்காக ஏதேதோ செய்வது வழக்கம் என்ற விமர்சனம் அவரது ரசிகர்களாலே முன்வைக்கப்படுவது உண்டு. இப்போது லிங்கா படத்திற்காக ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி பலரது தலையை கிறுகிறுக்க செய்துள்ள ரஜினிகாந்த், இன்னும் என்னென்ன செய்யப்போகிறாரோ என்ற ஆதங்கம், தமிழ் டிவிட்டர்களின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படும், வாழவந்தான் (எ) வத்தியுடையது.

காசு, பணம், துட்டு, மணி

திரைப்பட உலகில் பணம் சம்பாதிக்க, எப்படியெல்லாம் பல்டி அடித்து பேச வேண்டியுள்ளது என்று ரஜினி மனதிற்குள் நினைத்துக்கொள்வதாக கிண்டல் செய்கிறது, இந்த டிவிட்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

பாஜக தன்னை இழுக்க பார்ப்பதால், ஜெயலிலதாவுக்கு வாழ்த்து அனுப்பி, நைசாக தப்பிவிட்டதாக ரஜினி நினைத்துக்கொண்டிருக்கலாம் என கூறுகிறது இந்த டிவிட்.

English summary
After Rajinikanth greets Jayalalitha, social network users trolled him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X