For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆகஸ்ட் மாதத்தை ஆக்கிரமித்த “சூப்பர் மூன்” மற்றும் “விண்கல் பொழிவு” – இயற்கை சீற்றங்கள் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: விண்வெளியில் ஏற்படும் அதிசய நிகழ்வுகளான "சூப்பர் மூன்" மற்றும் விண்கல் பொழிவானது இவ்வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

விண்வெளி பற்றிய ஆராய்ச்சிகள் கலிலியோ காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.

ஆனால் இன்று வரை இதற்கான முடிவுகள் எட்டபடவில்லை.

கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சி:

கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சி:

விண்வெளி மண்டலம் மனிதனால் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு பெரியதாக உள்ளதால் அறியும் ஆர்வமும் விரிந்து கொண்டே போகிறது. மனிதனுக்கு எட்டக் கூடிய நிலையில் உள்ள கிரகங்கள் பற்றிய ஆராய்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.

இயற்கை ரகசியம்:

இயற்கை ரகசியம்:

இந்த உலகம் இயங்கி வரும் இயற்கை ரகசியத்தை இன்று வரை மனிதனால் அறிந்து கொள்ளமுடியவில்லை. இதற்கான தீர்வுகள் கிடைக்குமா என்பதும் இன்னும் கேள்விகுறியாகவே உள்ளது.

விடை தெரியா கேள்விகள்:

விடை தெரியா கேள்விகள்:

அதுபோல தான் சந்திரன் என்ற துணைக்கோள் எதற்காக பூமியை சுற்றி இயங்க வேண்டும். அதில் தண்ணீர் இருக்கிறதா, மனிதன் வாழ முடியுமா என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

பூமியை நெருங்கும் நிகழ்வு:

பூமியை நெருங்கும் நிகழ்வு:

இப்படி ஒரு நிலையில் "சூப்பர் மூன்" என்ற நிகழ்வு வானில் ஏற்பட்டுள்ளது. இது பற்றி நிறைய தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் மூன் என்பது சந்திரன் பூமியை மிக நெருக்கமாக நெருங்கி வரும் நிகழ்வு ஆகும்.

பெரிய நிலவு:

பெரிய நிலவு:

சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும். இந்த நிகழ்வுக்கு சூப்பர்மூன் என்று பெயர். இந்த நிகழ்வு ஆகஸ்டு 10 அன்று விண்ணில் நடந்தது. பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்று பெரியதாக நிலவு காட்சி தரும்.

எரிமலை வெடிப்பு ஜாக்கிரதை:

எரிமலை வெடிப்பு ஜாக்கிரதை:

இப்படி நிலவு பூமியை நெருங்கி வரும் சமயங்களில் நிலநடுக்க அபாயங்களும், உயிர்களை கொல்ல கூடிய நோய்கள், எரிமலை வெடிப்பு, கடல் சீற்றங்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

பூமிக்கு மிக அருகில்:

பூமிக்கு மிக அருகில்:

பூமியை நெருங்கும்பொழுது சந்திரன் 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 மைல்கள் தொலைவில் இருக்கும். அப்பொழுது, 16 சதவீதம் பெரியதாகவும் மற்றும் 30 சதவீதம் அதிக வெளிச்சத்துடனும் அது இருக்கும். பூமியை வழக்கத்திற்கு மாறாக 863 மைல்கள் அருகில் நிலவு நெருங்கி வரும்.

இயற்கை சீற்றங்கள்:

இயற்கை சீற்றங்கள்:

நிலா மிக அருகில் வருவதால் அதிக வெளிச்சம் ஏற்படும். இதன் தாக்கத்தால், பூமியில் கடல் அலைகள் அதிக உயரத்துடன் எழும்பும். பூமியின் அடுக்குகள் இடம் பெயரும். சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என விஞ்ஞான தகவல்கள் கூறுகிறது.

விண்கல் பொழிவு:

விண்கல் பொழிவு:

இதேபோல் மிகவும் அரிய வான்வெளி நிகழ்வான விண்கல் பொழிவையும் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
A lot going on in the night sky over the next several days. The August full moon, which occurs tonight, may look a little bigger and brighter than normal. In fact, it will be 14% bigger and 30% brighter. The reason is because the moon is at lunar perigee. This means the moon is about 30,000 miles closer to the Earth than normal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X