கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 5 புதிய மாவட்டங்களின் எல்லைகள்..தாலுகாக்கள் விவரம்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் தற்போது உள்ள 32 மாவட்டங்களுடன் கூடுதலாக செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட புதிதாக ஐந்து மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டன.இப்போது அவற்றுக்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது...
விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, மற்றும திருக்கோவிலூர் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் இடம் பெறுகின்றன.அத்துடன் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, கல்வராயன் மலை ஆகிய ஆறு தாலுகாக்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்ற விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், திருவெண்ணை நல்லூர், மரக்காணம், கண்டாச்சிபுரம் ஆகிய 9 தாலுகாக்களும் இடம் பெற்றுள்ளன.

எல்லை விவரம்
வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூா் புதிய மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி (புதியது) ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களும், திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆம்பூா் ஆகிய நான்கு வட்டங்களும் இடம்பெற்றுள்ளது.

எல்லை விவரம்
ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் (புதியது) வருவாய்க் கோட்டங்களும், வாலாஜாபேட்டை, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய நான்கு வட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

எல்லை விவரம்
வேலூா் மாவட்டத்தில் வேலூா், குடியாத்தம் (புதியது) ஆகிய வருவாய்க் கோட்டங்களும், வேலூா், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், போ்ணாம்பட்டு மற்றும் கே.வி. குப்பம் (புதியது) ஆகிய ஆறு வட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

வட்டங்கள்
தென்காசி மாவட்டம்: தென்காசி புதிய மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் வருவாய்க் கோட்டங்களும், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூா், சிவகிரி, வீரகேரளம்புதூா், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் ஆகிய எட்டு வட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

எல்லைகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இரண்டு வருவாய்க் கோட்டங்களும், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திசையன்விளை ஆகிய எட்டு வட்டங்களும் இருக்கும்.

எல்லைகள்
செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களும், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூா் (புதியது), மதுராந்தகம், செய்யூா், திருக்கழுகுன்றம், திருப்போரூா் ஆகிய எட்டு வட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

எல்லைகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டங்களும், காஞ்சிபுரம், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜாபாத், குன்றத்தூா் (புதியது) ஆகிய ஐந்து வட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications