காவிரிக்காக தீக்குளிக்க முயன்ற 77 வயது முதியவர்.. சென்னை போராட்டத்திலும் பங்கேற்பு.. வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காவிரிக்காக தீக்குளிக்க முயன்ற 77 வயது முதியவர்-வீடியோ

  சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 77 வயது முதியவர் பங்கேற்றுள்ளார். அவர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளி்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடந்த பல நாட்களாக தர்ணா, போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

  The 77-year-old man has participated in the DMK protests

  இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தந்ததால் அவரை எதிர்த்து சென்னையில் திமுக சார்பில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

  இந்த போராட்டத்தில் 77 வயது திமுக தொண்டர் J.V.நாராயணப்பா என்பவர் பங்கேற்றுள்ளார். பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு அவர் பதிலளித்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

  அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இதற்கு முன்பும் போராட்டம் நடத்தியுள்ளதாகவும், சிறை சென்றுள்ளதாகவும், சூளகிரியில் கடந்த 3ம் தேதி இதற்காக தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.

  விவசாய வேலை பார்க்கும் தான், இந்த வயதில் போராட்டத்திற்கு வந்ததற்கான காரணத்தையும் தெரிவிதத்தார். "உயிரே போனாலும் கலைஞருக்காக போராட்டத்தில் கலந்து கொள்வேன்" என்று அவர் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The 77-year-old man has participated in the DMK protests protesting against Prime Minister Modi in Tamil Nadu. The video he spoke was goes viral.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற