தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கின் வாதங்கள் நிறைவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் வாதங்கள் நிறைவடைந்துள்ளது.

தினகரனுக்கு ஆதரவாகம் அதிமுக அரசுக்கு எதிராகவும் செயல்பட்ட 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

The arguments of the case against the disqualification of 18 MLAs are completed

இந்த வழக்கில் தினகரன் மற்றும் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வாதாடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில், எழுத்துப்பூர்வ வாதங்களை ஜனவரி 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சபாநாயகர், சட்டசபை செயலர், கொறடா, முதல்வர், 18 எம்எல்ஏக்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே கொறடா உத்தரவை மீறி ஓட்டுப்போட்ட ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜனவரி 17ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The arguments of the case against the disqualification of 18 MLAs supporting DTV Dinakaran are completed. In this case, the Madras High Court has ordered the Speaker, Legislative Secretary, Chief Minister and 18 MLAs to submit the written arguments by January 22.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற