For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதி முன்பு இன்று விசாரணை

    சென்னை: 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி உத்தரவிட்டார்.

    Third judge to hear 18 MLAs disqualification case

    இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த இந்திரா பானர்ஜி சபாநாயகரின் உத்தரவு சரியே என்றும், அதில் தலையிட முடியாது என்றும் கடந்த மாதம் 14ம் தேதி தீர்ப்பளித்தார். ஆனால் நீதிபதி சுந்தரோ சபாநாயகரின் செயல் சட்டவிரோதமானது, உள்நோக்கம் கொண்டது என்பதால் அவரின் உத்தரவை ரத்து செய்தாக தெரிவித்தார்.

    இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டதால் யாருடைய தீர்ப்பு சரி என்பதை முடிவு செய்ய 3வது நீதிபதியாக எம். சத்தியநாராயணனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

    இந்நிலையில் தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விசாரணை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி மதியம் 2.15 மணிக்கு விசாரணை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Third judge M. Sathyanarayanan will hear the 18 MLAs disqualification case from june 23rd till 27th for five days. Third judge is assigned by the apex court after split verdict given by two judges.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X