விதிமுறை மீறல்களால் 61 பேர் உயிரை குடித்த மவுலிவாக்கம் கட்டிட விபத்து! ஒரு நினைவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மவுலிவாக்கம் 11 மாடி கட்டட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நேற்று 3-ஆம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கட்டடத்தின் தொடக்கம் முதல் அதன் இன்னொரு 11 மாடி கட்டடம் இடிக்கப்பட்டது வரை டைம்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு போரூர் மவுலிவாக்கம் 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி கட்டடங்கள் அருகருகே கட்டப்பட்டு வந்தன.

Timeline for moulivakkam building crash

ஜூன் 28-இல் பலத்த இடியுடன் கூடிய மழையின் போது ஒரு 11 மாடி கட்டடம் இரண்டாக பிளந்து தரை மட்டமானது.

ஜூன் 28- இல் கட்டட இடிபாடுகளில் சிக்கி 61 பேர் பலியாகினர்.

ஜூலை 2- இல் கட்டடத்தின் உரிமையாளர், பெண் ஆர்க்கிடெக்ட உள்ளிட்ட 9 பேர் கைது

15 ஜூலை 2014 - மௌலிவாக்கம் கட்டடத்தின் பெண் ஆர்க்கிடெக்கின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஆகஸ்ட் 26- இல் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் விசாரணை அறிக்கையை அளித்தது.

கடந்த 2016-இல் ஏப்ரல் 18-இல் மௌலிவாக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்த இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நவம்பர் 2-ஆம் தேதி இடிந்து விபத்தை ஏற்படுத்திய கட்டடத்துக்கு அருகில் இருந்த மற்றொரு 11 அடுக்கு மாடி கட்டடமும் 3 நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது.

மே 11 2017- மவுலிவாக்கம் விபத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Timeline for moulivakkam building collapse incident from death to inquiry.
Please Wait while comments are loading...