For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பட்ஜெட்: 2015-16 ஆம் ஆண்டுக்கு ரூ55,100 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் ஓ.பி.எஸ்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பட்ஜெட்டில் 2015-16ஆம் ஆண்டுக்கு ரூ55,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:

TN budget: Rs 55,100 crore allocation for 2015-2016

தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியால் வரி வருவாய் உயரவில்லை. பெட்ரோலிய பொருட்களின் விலை வீழ்ச்சியால் வரி வருவாய் குறைந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி விகிதிம் 2014-15-ல் 7.25 சதவீதம். கல்வி, மக்கள், நலவாழ்வு ஆகியவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

நலத்திட்டங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலத்தின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும்.

சமூக நலத்திட்டங்களால் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தை தடுக்கும் வகையில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் ரூ.75 கோடி ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்படும். 2015-16 ஆண்டுக்கு ரூ 55,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

English summary
Tamilnadu CM O Panneerselvam said that Rs 55,100 crore the budgetory allocation for 2015-2016 in assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X