For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்டிலாம் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியா மூட முடியாது... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்டி சொல்லிட்டாரே!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட முடியாது என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி ராஜேந்திர பாலாஜி- வீடியோ

    சிவகாசி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடிவிட முடியாது,ஆலையால் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான பணியை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 24ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் இந்த மக்களின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது.

    TN Minister Rajendra balaji says not immediate closure of Sterlite industry at Tuticorin

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த போது, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட முடியாது. ஆலையால் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதன் பின்னரே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்களின் போராட்ட பின்னணியில் திமுக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் நாடகம் போடுகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது ஏன் என்றும் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.

    English summary
    TN minister Rajendra balaji says government will not able to close tuticorin Sterlite industry a review has been made and after that only legal actions will be taken against them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X