ஸ்டெர்லைட்: சாகும் வரை உண்ணாவிரதம் நடத்த தினகரன் முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் நடத்த விரைவில் முடிவு செய்யப்படவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

TTV Dinakaran decides to involve hunger strike until death protest

ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய், மூச்சுதிணறல், இதய நோய் உள்ளிட்டவை ஏற்படுவதால் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என குமரரெட்டியாபுரம் மக்கள் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கண்டன பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அமைச்சர்கள், அரசு மீது பேசியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தால் ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தை சோமாலியாவாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது என்றார் டிடிவி தினகரன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran decides to involve hunger strike until death protest in the issue of Sterlite.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற