தினகரன் வெற்றி ஒரு மாடல் வெற்றிதான்.. ரத்து செய்ய வாய்ப்பிருக்கு.. சொல்கிறார் எச் ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி ஒரு மாடல் வெற்றிதான் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் 89 ஆயிரம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஆனால் அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

TTV Dinakaran Victory is a model victory: H Raja

இந்நிலையில் டிடிவி தினகரன் வெற்றி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி என்பது ஒரு மாடல் வெற்றிதான் என அவர் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் பெற்ற வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் மூலம் தேர்தலை ரத்து செய்ய அதிக வாய்ப்புள்ளது என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். ஏற்கனவே டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்ற காரணத்தினால்தான் ஆர்கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran Victory is a model victory said H Raja. He also said tha the RK Nagar election will be canceled by the electioncommission.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற