சரி செய்யப்பட்டது தொழில்நுட்பக் கோளாறு ... இயங்கியது டுவிட்டர் பக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூகவலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் பக்கம் முடங்கியது. இதனால் கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடியாமல் இளைஞர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு பிறகு டுவிட்டர் பக்கம் இயங்கியது.

சமூகவலைதளங்களில் நடிகர், நடிகைகள், செய்தி நிறுவனங்கள், ஆளுநர், பிரதமர், ஜனாதிபதி என ஏராளமானோர் டுவிட்டர் கணக்கை வைத்துள்ளனர். இதன் மூலம் மக்கள் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் உடனுக்குடன் அனுப்புகின்றனர்.

Twitter page freezes after some technical problem

பேஸ்புக், வாட்ஸ் அப் போல் இளைஞர்கள் மத்தியில் டுவிட்டர் பக்கத்துக்கு வரவேற்பு இருந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக டுவிட்டர் பக்கம் முடங்கியது.

இதனால் அதை பயன்படுத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்களுக்கு கிடைத்த தகவல்களை உடனடியாக பதிவு செய்ய முடியாமல் திணறினர். தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து டுவிட்டர் பக்கம் இயங்கத் தொடங்கியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Twitter page freezes fully after some technical problem occurs.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற