மேலூரில் டாஸ்மாக் கடை பாட்டில்களை அடித்து நொறுக்கி பெண்கள் போராட்டம் : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதில் குடித்துக்கொண்டிருந்தவர்களை தாக்கியதால் பரபரப்பு உண்டானது.

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மேலூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து கடைகளில் இருந்த மது பாட்டில்களை கீழே போட்டு உடைத்து நொறுக்கினர்.

அதுமட்டுமில்லாமல் இத்தனை களேபரங்களுக்கிடையிலும் குடித்துக்கொண்டிருந்தவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Viduthalai siruthaikal katchi women protested against Tasmac in Melur, Madurai and they have been arrested.
Please Wait while comments are loading...