தெலுங்கு மெர்சலுக்கு வெட்டு எதுவும் இல்லாமல் தணிக்கை சான்றிதழ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு மெர்சல் படமான அதிரிந்தியில் காட்சிகள் எதுவும் நீக்கப்படாமல் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சனங்கள் இருந்தன. இதனால் தமிழில் வெளியானது முதல் பெரும் சர்ச்சையானது.

Vijay's Mersal Telugu version Adirindhi gets censor certificate

இது தேசிய அளவிலும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் மெர்சல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இப் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்க சென்சார்போர்டு வலியுறுத்தியதாகவும் இதை ஏற்று காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் அக்டோபர் 27-ந் தேதி அதிரிந்தி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என கூறி படம் வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாகி ஹேமா ருக்மணி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், அதிரிந்திக்கு தணிக்கை சான்ரிதழ் கிடைத்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். சென்னை மண்டல அதிகாரி மதியழகன் இச்சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும் தெலுங்கில் அதிரிந்தி விரைவில் வெளியாகும் எனவும் ஹேமா ருக்மணி தம்முடைய ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Adirindhi the Telugu version of Vijay's hit film Mersal, has received a U/A certificate.
Please Wait while comments are loading...