For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுக்காட்டில் வழுக்கிய விருதுநகர் – 9 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி

Google Oneindia Tamil News

விருதுநகர்: ஒவ்வொரு வருடமும் தேர்ச்சியில் அதிக விழுக்காடுகளைப் பெறும் விருதுநகர் மாவட்டம்.

ஆனால், இந்த வருடம் 9 அரசு பள்ளிகளும், 59 தனியார் பள்ளிகளும் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளே அதிக தேர்ச்சி விழுக்காடுகளைப் பெற்றுள்ளது.

Viruthunagar slipped in Exam centum percentage…

தேர்ச்சியை அள்ளும் பள்ளிகள்:

விருதுநகர் மாவட்டத்தில் 66 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்பட தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 193 பள்ளிகள் இயங்கி வருகின்றன. பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில்தான் ஆண்டு தோறும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது.

தனியாருக்கு மவுசு ஜாஸ்தி:

இதனால் அரசு பள்ளிகளை விட இந்த மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்குத்தான் மவுசு அதிகம். இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 28 பேர் எழுதினர். இதில் 21 ஆயிரத்து 173 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

9 அரசு பள்ளிகள்தான்:

பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் 9 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

59 தனியார் பள்ளிகள்:

59 தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.

பெற்றோர்கள் குமுறல்:

குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து வருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக சம்பளம் வாங்குகின்றனர். அரசின் பல சலுகைகளை அனுபவிக்கும் அவர்களால் அரசு பள்ளிகளில் போதிய தேர்ச்சி சதவீதத்தை ஏன் காட்ட முடியவில்லை என்று பெற்றோர்கள் குமுறுகின்றனர்.

English summary
Viruthunagar government school percentages reduced very much in this time. Private schools increased in Viruthunagar that is the main reason for this low percentage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X