வருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக்கிடம் 4 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா?.. | விவேக்கிற்கு பணத்தால கண்டம்- வீடியோ

  சென்னை: ஜெயா டிவியை நிர்வகித்து வரும் இளவரசி மகன் விவேக்கிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து 4 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து விவேக் வீட்டுக்குப் புறப்பட்டு சென்றார்.

  சசிகலா குடும்பத்தின் 355 பேரை இலக்கு வைத்து இமாலய வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. கடந்த 5 நாட்களாக இந்த விசாரணை நடத்தப்பட்டது.

  Vivek taken by IT officers for enquiry

  இந்த விசாரணையில் ஜெயா டிவியை நிர்வகித்து வரும் ஜாஸ் சினிமாஸ் உரிமையாளர் விவேக், அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா, திவாகரன் ஆகியோர் பிரதான இலக்காக இருந்தது. கிருஷ்ணப்பிரியா, விவேக் வீடுகளில் 5 நாட்களாக இன்றும் சோதனை நடைபெற்றது.

  இந்நிலையில் இன்று திடீரென மாலை விவேக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அரைமணிநேரத்துக்குப் பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு விவேக் கொண்டுவரப்பட்டார்.

  அங்கு விவேக்கிடம் 4 மணிநேரம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. இந்த கிடுக்குப்பிடி விசாரணையில் பல இடங்களில் விவேக் திணறியதாகவும் கூறப்படுகிறது. 4 மணிநேர விசாரணைக்குப் பின் இரவு 10 மணியளவில் விவேக் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Ilavarasi Son Vivek Jayaraman was taken by the Income Tax Officers for the enquiry from his house.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற