For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாரா அப்ளிகேஷனுக்கு எதிராக குவிந்த புகார்கள்.. பிளே ஸ்டோரில் நீக்கப்பட்டது ஏன்?

சாரா அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சாரா ஆப்பை தடை செய்த கூகுள்- வீடியோ

    சென்னை: சாரா அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. இது மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது சவுதியில் இருக்கும் நிறுவனம் ஒன்றின் மூலம் உருவாக்கபட்டது.

    இந்த அப்ளிகேஷன் மூலம் அந்த நிறுவனம் நிறைய வருமானம் ஈட்டி இருக்கிறது என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த அப்ளிகேஷனுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க நிறைய பயனாளிகள் இருந்தார்கள்.

    எத்தனை எத்தனை

    எத்தனை எத்தனை

    இந்த அப்ளிகேஷன் வந்தவுடன் நிறைய மெசேஜ்கள் அனுப்பப்பட்டது. பலர் தங்கள் எதிர்பாலினத்திற்கு ரகசிய காதல் கடிதங்கள் எல்லாம் அனுப்பினார்கள். ஜென் இசட் மட்டும் இல்லாமல் எக்ஸ், ஒய் கூட இதனை அதிகம் பயன்படுத்தியது.

    பெரிய உதவிகள்

    பெரிய உதவிகள்

    இதன் மூலம் சிலர் ஆக்கபூர்வமான உதவிகள் கூட செய்து வந்தனர். மருத்துவம் சம்பந்தப்பட்ட ரகசிய கேள்விகளுக்கு சில டாக்டர்கள் பதில் அளித்துக் கொண்டு இருந்தார்கள். வரலாறு தொடர்பான அரசியல் கேள்விகளுக்கு கட்சிக்காரர் பதிலளித்து வந்தார்கள். நன்றாக பயன்பட்டு வந்தது.

    கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    ஆனால் நியூயார்க்கில் உள்ள பள்ளி மாணவி ஒருத்திக்கு இதன் மூலம் கொலை மிரட்டல் சென்று இருக்கிறது. யார் என்று தெரியாத காரணத்தால் அந்த மாணவி தற்கொலை முயற்சி வரை சென்று இருக்கிறாள். அதே வாரம் அதே பள்ளியை சேர்ந்த இன்னொரு மாணவனும் மோசமான முறையில் உடல் ரீதியாக கிண்டல் செய்யப்பட்டு இருக்கிறான்.

    பாலியல்

    பாலியல்

    அதேபோல் பெண்களுக்கு பாலியல் தொடர்பாகவும் சீண்டல்கள் சென்று இருக்கிறது. சில பிரபலங்கள் இதை பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற சீண்டல் மெசேஜ்கள் சென்று இருக்கிறது. அப்போதுதான் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.

    கண்டுபிடிக்க

    கண்டுபிடிக்க

    அந்த சமயத்தில் நமக்கு மெசேஜ் அனுப்பும் நபர்களை கண்டுபிடிக்க புதிய அப்டேட் இதில் வரும் என்றார்கள். தனியாக இதற்கு நிறைய ஆப் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் கொஞ்ச நாளில் அதெல்லாம் வதந்தி அப்படி கண்டுபிடிக்க முடியாது என்று கூறியுள்ளார்கள்.

    மொத்தமாக நீக்கியது

    மொத்தமாக நீக்கியது

    இப்படி மொத்தமா நிறைய புகார்கள் வந்த காரணத்தால் இந்த அப்ளிகேஷன் நீக்கப்பட்டு இருக்கிறது. இதே போல், இதை காப்பியடித்து உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்களும் நீக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் சில நாடுகளில் சாரா இயங்கி வருகிறது.

    English summary
    Google play store removes Sarahah application form its site. 470,000 raised complaint against it, says that it is bullying app. So that Google took immediate action on this and removed the app.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X