For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பைக்" மோதி கால் துண்டான வாலிபர்.. நடு ரோட்டில் உயிருக்குப் போராடிய பரிதாபம்!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அரசு பஸ் மீது வேகமாக வந்த பைக் மோதியது. இதில் பைக்கில் பயணித்த இளைஞர் கால் துண்டாகி நடு ரோட்டில் வெகு நேரம் உதவி கிடைக்காமல் துடிதுடித்த பரிதாபம் நடந்துள்ளது.

பாவூர்சத்திரம் அருகே உள்ளது கல்லூரணி. அந்த பகுதி சுடலைமாடன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்தையா. பாவூர்சத்திரம் தனியார் பிஸ்கட் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மாலை ஆலங்குளத்தி்ற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

சாலைபுதூர் அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் மீது பைக் வேகமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்தார் முத்தையா. அவரது வலதுகால் துண்டானது.

தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். முருகனை மீட்டு சிகிச்சைக்காக அனுப்புவதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது.

நிறைய ரத்தம் வெளியேறிய நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முருகன் துடிதுடித்தபடி கிடந்தது பரிதாபமாக இருந்தது. பின்னர் முருகன் வேலை பார்க்கும் பிஸ்கட் கம்பெனிககு தகவல் தெரிவித்து அங்கிருந்த வந்த காரில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் கீழப்பூலியூரை சேர்ந்த சுரேஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் நெல்லை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு தேங்கிப் போய் நின்றன.

English summary
A private company driver was severely injured in a road accident near Pavoor Chathiram and was left abandoned in the road for many hours before rescued by police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X