திசையன்விளையில் நடந்த திருப்பம்.. திமுக கைக்கு நழுவிப்போன வெற்றி.. அதிமுகவிற்கு கைகொடுத்த அதிருஷ்டம்
திருநெல்வேலி: திசையன்விளை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. பேரூராட்சி தலைவராக அதிமுகவின் ஜான்சி ராணி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் திமுக அதிகமாக வென்றிருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்திலும் திமுகவே அதிக இடங்களில் வாகை சூடியிருந்தது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் மட்டும் திமுகவுக்கு சறுக்கல் ஏற்பட்டது. மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 9, திமுக, காங்கிரஸ் தலா 2, பாஜக, தேமுதிக தலா ஒன்று, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு
மேலும் பேரூராட்சி கவுன்சிலர்களாக ஜான்சிராணி, ஜெயக்குமார், ஆறுமுக தேவி, பிரதீஷ் குமார், உமா, சண்முகவேல், முத்துக்குமார், பிரேம்குமார், தனசீலன் ஈஸ்வரி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு 9 பேருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

வேட்பாளர் மாற்றம்
இதற்கிடையே திமுக சார்பில் சுபினா என்பவரை பேரூராட்சி தலைவராக திமுக அறிவித்தது. இன்று காலை திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடந்தது. ஆனால் திமுகவின் சுபினாவுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இவருக்கு யாரும் முன்மொழியவில்லை. கமலா நேரு என்பவர் திமுக கூட்டணி சார்பில் கமலா நேரு என்பவர் தலைவராக்க முன்மொழிந்தனர்.

குலுக்கலில் அதிமுக வெற்றி
அதிமுக சார்பில் 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்ட இருவரும் தலா 9 ஓட்டுகள் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டது. இதில் அதிமுகவின் 3வது வார்டு கவுன்சிலர் ஜான்சிராணி வெற்றி பெற்று பேரூராட்சி தலைவரானார்.

திமுக கூட்டணியில் அதிமுக
இந்த மறைமுக தேர்தலின்போது பாஜக கவுன்சிலர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு அதிமுக கவுன்சிலர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் தான் தலைவர் வேட்பாளர்கள் 9 ஓட்டுகள் பெற்றனர். இல்லாவிட்டால் எளிமையாக அதிமுக வெற்றி பெற்றிருக்கும். குலுக்கல் முறையில்தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications