திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நயினார் சொன்னத கவனிச்சீங்களா? இப்படியும் இல்ல.. அப்படியும் இல்ல! திமுக, அதிமுக பற்றி குழப்பம்

Google Oneindia Tamil News

நெல்லை: மதுரை சரவணனை தொடர்ந்து நயினார் நாகேந்திரனும் திமுகவில் இணையப்போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அந்த கணிப்புகள் யாவும் தவறு என்பது அவர் நேற்று அளித்த பேட்டியின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

Recommended Video

    ஒரே விஷயத்தில் 2 விதமான கருத்து... Annamalai, Nainar Nagendran கருத்தால் BJP-ல் குழப்பம் *Politics

    கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது பாஜகவினர் காலணியை வீசிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    காலணி வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், திமுகவிலிருந்து விலகி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணன், அதே நாளில் பிடிஆரை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

     இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது

    நயினார் பேட்டி

    நயினார் பேட்டி

    இதேபோல் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனும் திமுகவில் இணையப்போகிறார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் நெல்லையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாநில அரசு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நன்மையாக இருக்கும். மாநில அரசு மத்திய அரசோடு ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் வாக்களித்த மக்களுக்கு இழப்பாக அமையும்.

    திமுக இணைகிறேனா?

    திமுக இணைகிறேனா?

    டாக்டர் சரவணன் ஒரு மாத காலமாக திமுகவிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. அமைச்சர் வாகனங்களில் தாக்குதல் நடந்த சம்பவத்தால் தான் டாக்டர் சரவணன் கட்சியை விட்டு வெளியேறினார் என்பதை காரணமாக சொல்ல முடியாது. நயினார் நாகேந்திரன் திமுகவிற்கு செல்கிறார் என்று நான் அதிமுகவில் ஜெயலலிதா இருந்த காலம் தொட்டு சொல்லிவருகிறார்கள். எந்த எண்ணத்தில் நான் திமுகவிற்கு செல்கிறேன் என்று சொல்கிறார்கள் என தெரியவில்லை.

    கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவன் நான்.

    இப்படியும் இல்ல, அப்படியும் இல்ல

    இப்படியும் இல்ல, அப்படியும் இல்ல

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் கலந்து கொண்டு நட்புறவோடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை வைத்து திமுக பாஜகவுடன் நெருங்கிறது என சொல்லமுடியாது. ஆளுநர் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக கலந்து கொள்ளவில்லை என்பதற்காக பாஜக திமுகவுடன் இருந்து விலகி உள்ளது எனவும் சொல்ல முடியாது. பாஜக மத்திய அரசு திமுக மாநில அரசு அவ்வளவுதான்.

    கூட்டணி அதிமுகவோடுதான்

    கூட்டணி அதிமுகவோடுதான்

    மீண்டும் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவார். எப்போதும் பாரதிய ஜனதா கட்சி ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. எங்களுடன் நட்பா நட்பில்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் எனவும். அதிமுகவுடன் பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஓபிஎஸ் ஆக இருந்தாலும் சரி ஈபி.எஸ் ஆக இருந்தாலும் சரி அதிமுகவுடன்தான் பாஜக கூட்டணி." என்றார்.

    English summary
    BJP Nayinar Nagendran confusing statement on DMK, ADMK relationship: மதுரை சரவணனை தொடர்ந்து நயினார் நாகேந்திரனும் திமுகவில் இணையப்போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அந்த கணிப்புகள் யாவும் தவறு என்பது அவர் நேற்று அளித்த பேட்டியின் மூலம் உறுதியாகி இருக்கிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X