அண்ணன் முறை நபரின் அநியாயம்.. தங்கை குளிக்கும் போது.. கையை உள்ளே விட்டு.. திடுக்கிட்ட திருவாரூர்!
திருவாரூர் : திருவாரூர் அருகே தங்கை குளிக்கும்போது ஆபாச படம் எடுத்ததோடு, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டிய அண்ணனை சுமார் 4 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள், வன்முறைகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
குறிப்பாக கொரோனா காலத்திலும் அதற்குப் பிறகு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், குழந்தை திருமணம் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை
18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாகும் போது அவர்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்களாலேயே இது போன்ற பெரும்பாலான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. அரசு எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என செய்தாலும், இது போன்ற நிகழ்வுகள் தடுக்க முடியாததாகி வருகிறது.

திருவாரூரில் அதிர்ச்சி
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவருடைய தூரத்து சொந்தமான மோகன்ராஜ் அண்ணன் முறை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி குளிக்கும்போது ஆபாச படம் எடுத்து சிறுமியை படத்தை காட்டி சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்றும் மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மிரட்டியுள்ளார்.

ஆபாச வீடியோ எடுத்த அண்ணன்
மேலும் கடந்த வாரம் மோகன்ராஜ் மற்றும் அவரது தந்தை தாயார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் சேர்ந்து சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து மனமுடைந்த சிறுமி அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். இந்நிலையில் மயங்கிய நிலையில் சிறுமியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று நலமாகியுள்ளார்.

போக்சோவில் கைது
இதுகுறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் மோகன்ராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது தந்தை தனிக்கொடி, தாயார் சாந்தி தம்பி பாக்கியராஜ் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் அனைவரையும் கடந்த வாரம் முதல் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த மோகன்ராஜை இன்று காவல்துறையினர் கைது செய்தனர்.. மேலும் தலைமறைவாக உள்ள அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications