திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆர்.கே. ரோஜா அனே நேனு".. அவமானங்கள், கண்ணீரை கடந்து ஆந்திர அமைச்சரவையில் "பூத்த" ரோஜா.. என்ன துறை?

Google Oneindia Tamil News

திருப்பதி: ஆந்திராவில் முதல்முறையாக அமைச்சராக பதவியேற்ற ரோஜா எத்தனையோ அவமானங்கள், கண்ணீர், துன்பங்களை தாண்டி சாதித்துள்ளார்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரோஜா, சினிமா துறையில் பல மொழிகளில் சாதித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அவர் 2004 ஆம் ஆண்டு சந்திரபாபுவின் சொந்த தொகுதியான சித்தூரில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட்டார்.

அந்த முறை தெலுங்கு தேசம் தோல்வி அடைந்ததை போல் ரோஜாவும் தோல்வி கண்டார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு ரோஜாவுக்கு சந்திரகிரி தொகுதி ஒதுக்கப்பட்டு களப்பணியாற்றினார். ஆயினும் சொந்த கட்சியினர் மாற்று கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால் ரோஜா தோற்று போனார்.

 தம்பி ரஹ்மான்! எல்லாம் சரிதான்! முதல்ல உங்கள் குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றுங்க! பாஜக பிரமுகர் தம்பி ரஹ்மான்! எல்லாம் சரிதான்! முதல்ல உங்கள் குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றுங்க! பாஜக பிரமுகர்

மவுசு குறைந்தது

மவுசு குறைந்தது

இதையடுத்து கட்சியில் அவருக்கான மவுசு குறைந்தது. பின்னர் கட்சியிலிருந்தே ஒதுக்கப்பட்டார். பாலின பாகுபாடு, அவமானங்கள், துன்பங்கள் உள்ளிட்டவற்றை அந்த கட்சியில் கண்ட ரோஜா, ஒரு கட்டத்தில் அவரை யாருமே ஒரு பொருட்டாக மதிக்காத நிலைக்கு தள்ளப்பட்டார். பல நாட்கள் இரவு நேர தூக்கம் கெட்டு, கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

திறமை

திறமை

பின்னர் தனது திறமையை உணர்ந்த ரோஜா ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தேர்தல் வந்தது, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார், விட்டதை பிடித்தார். புதிய கட்சியில் ஸ்டார் பேச்சாளரானார். அந்த தேர்தலில் தன்னை அவமானப்படுத்திய சந்திரபாபு நாயுடுவை பற்றி கிழி கிழியென கிழித்தார்.

முதல் முறை

முதல் முறை

இதையடுத்து முதல் முறையாக மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட்டார். நகரி தொகுதியில் மக்களுக்காக பல பணிகளை செய்தார். தமிவகத்தின் அம்மா உணவகத்தை போன்று அங்கு ஒய்.எஸ்.ஆர். அண்ணா உணவகம் என்ற ஒன்றை தொடங்கி தினமும் ஆயிரக்கணக்கானோர் பசியாற்றினார்.

டிவி ஷோக்கள்

டிவி ஷோக்கள்

இவற்றையெல்லாம் டிவி ஷோக்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து செலவு செய்தார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றியும் கண்டார். 15 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் ரோஜாவுக்கு முதல் வெற்றி இந்த தேர்தல் என்றே சொல்லலாம். பின்னர் 2014 ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபையில் ரோஜாவின் உதவியுடன் எதிர்க்கட்சியாக நுழைந்தது.

தெலுங்கு தேசம்

தெலுங்கு தேசம்

அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் குறைபாடுகளை சட்டசபையில் அம்பலப்படுத்தினார். தனது தொகுதியில் மக்களோடு மக்களாக பழகுவது. நடிகை, எம்எல்ஏ என்ற எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததற்கு ரோஜாவும் ஒரு காரணம். இதனால் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட ரோஜா அமைச்சராக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அமைச்சராக்கப்படவில்லை

அமைச்சராக்கப்படவில்லை

ஆனால் அவர் அமைச்சராக்கப்படவில்லை. தற்போது அமைச்சரவை புதிதாக மாற்றியமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. இதனால் ரோஜாவுக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இதையடுத்து அவர் அமைச்சராக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இதையடுத்து அவருக்கு ஒதுக்கப்படும் துறை குறித்து அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவருக்கு சுற்றுலா மற்றும் கலாச்சார துறை, இளைஞர் நலம் வழங்கப்பட்டது. புதிதாக 25 அமைச்சர்களுடன் 5 பேர் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

ரோஜாவுக்கு எந்த துறை?

ரோஜாவுக்கு எந்த துறை?

அவர்களில் ஏற்கெனவே துணை முதல்வர்களாக அம்ஜத் பாஷா, நாராயணசாமி ஆகியோருடன் முதயால நாயுடு, கிட்டு சத்யநாராயணா, ராஜண்ணா ஆகியோரும் துணை முதல்வர்களாகியுள்ளனர். அமைச்சர் பதவி கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அடுத்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ஆந்திராவுக்கு மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது.

English summary
Actress Roja appointed as tourism minster. 5 Deputy CMs are also swearing in yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X