பக்தர்களே.. சூரிய கிரகணம், சந்திர கிரகணம்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை திறப்பு நேரம் தெரியுமா?
திருப்பதி: சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நாட்களில் ஏழுமலையான் கோவில் 10 மணி நேரத்திற்கு மேலாக நடை அடைக்கப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்யப்போகும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் புகழ்பெற்ற கோவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வந்து ஏழுமலையானை தரிசித்து செல்வது வழக்கம். அதிலும் விடுமுறை நாட்கள் என்றால் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இதனால் ஏழுமலையான குறைந்த பட்சமா 10 மணி நேரம் வரையிலும் காத்திருந்து தரிசனம் செய்வதுண்டு.
புரட்டாசி மாதம் பிறக்கப்போகிறது இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இன்னும் சில வாரங்களில் பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனின் முன்பதிவு செய்து வருகின்றனர்.

சூரிய கிரகணம்
அடுத்த மாதம் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வருவதை முன்னிட்டு ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பினை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25-ந்தேதி 9 மணிநேரத்துக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணியளவில் 11 மணிநேரம் மூடப்பட்டு இருக்கும்.

ஆர்ஜித சேவைகள் ரத்து
கோவில் நடை மூடப்படுவதை முன்னிட்டு அன்றைய தினம் கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர்.

சந்திர கிரகணம்
அதேபோல் நவம்பர் மாதம் 8ஆம் தேதி மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. எனவே நவம்பர் மாதம் 8-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 10 மணிநேரம் மூடப்பட்டு இருக்கும். இதனால், அன்று கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம் ரத்து செய்யப்படுகின்றன.

இலவச தரிசனம் மட்டும் அனுமதி
முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர். இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications