4 வயது சிறுமிக்கு பள்ளியில் நேர்ந்த கொடுமை.. கொந்தளிக்கும் திருப்பூர்.. வீதிக்கு வந்த பொதுமக்கள்!
திருப்பூர்: திருப்பூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு ஆளானதாக எழுந்த புகாரில் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
Recommended Video
தனியார் பள்ளி ஊழியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என பெற்றோர், உறவினர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் பள்ளி மாணவி
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை அடுத்து பூலுவப்பட்டியில் அமைந்துள்ளது ஒரு தனியார் பள்ளி. இந்த பள்ளியில் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 4 வயது சிறுமி எல்கேஜி படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு வந்தபோது அயர்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தையை தொடும்போதேல்லாம் வலிக்கிறது எனக் கூறி அழுதுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் எங்கே வலிக்கிறது, எதனால் வலிக்கிறது என கேட்டுள்ளனர்.

எல்கேஜி மாணவிக்கு பாலியல் தொல்லை
அதற்கு அந்த குழந்தை பள்ளியில் வேலை செய்யும் பணியாளர் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். இதை அடுத்து சிறுமி பாலியல் தொலைக்கு ஆளாகி இருப்பதை புரிந்து கொண்ட பெற்றோர் இதுகுறித்து அனுப்பர் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெண்கள் மற்றும் பாலியல் விவகாரம் என்பதால் இந்த வழக்கை திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குற்றம்சாட்டப்பட்ட பள்ளிக்கு சென்று சிசிடிவி பதிவுகள் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலைமறியல் போராட்டம்
மேலும் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் போலீசார் தீவிரம் காட்டவில்லை என்றும் குற்றவாளியை கைது செய்ய முன்னெடுக்க வில்லை எனவும் கூறி சிறுமியின் பெற்றோர், உறவினர் மற்றும் கிராம மக்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூரை அடுத்து பெருமாநல்லூர் சாலையில் பூலுவப்பட்டி பிரிவில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலால் அப்பகுதி ஸ்தம்பித்தது. இதனால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கிமீ தொலைவுக்கு வாகனங்கள் நின்றுகொண்டிருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடரும் பாலியல் புகார்கள்
தமிழகத்தில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான புகார்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி பள்ளியில் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை, கோவை தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கவர்த்தி, கரூர் வேதியியல் ஆசிரியர் என அடுத்தடுத்து வரும் புகார்களால் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும், இதுபோன்ற புகார்கள் நின்ற பாடில்லை. சமீபத்தில், கோவை சரவணம்பட்டியில் 2 சவரன் நகைக்காக பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரித்தபோது, குடும்ப நண்பரே மாணவியை கொன்றது அம்பலமானது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications