திருப்பூரில் பூட்டிய வீட்டில் 9 பேர் ஜாலி.. குடித்து கும்மாளமிட்டு.. உள்ளே பார்த்தால் யார் தெரியுமா
திருப்பூர்: திருப்பூர் மாநகரின் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக ஒழுக்கம் மற்றும் இளம் வயதினரின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை இந்த துயர சம்பவம் எழுப்பியுள்ளது. அத்துடன் படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றின கவலையையும் அதிகரிக்க செய்துள்ளது.. அப்படி என்னதான் நடந்தது?
திருப்பூரை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 17 வயதாகிறது.. இவரது உறவினர் ஒருவருக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட் வீடு ஒன்று அதே பகுதியில் உள்ளது.. இந்த வீடு சில காலமாக பூட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது..

திருப்பூர் அப்பார்ட்மெண்ட் வீடு
சம்பவத்தன்று சிறுமி தனது நண்பர்களுடன் அந்த வீட்டுக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாக அந்த வீட்டிற்குள் இருந்து தேவையற்ற சத்தங்களும், கூச்சல்களும் கேட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்குச் சந்தேகம் வந்தது. உடனே அவர்கள் அந்த வீட்டின் கதவைத் தட்டி பார்த்துள்ளனர்.. அப்போது உள்ளே இருந்தவர்களின் நிலைமையை பார்த்து அதிர்ந்து போனார்கள். காரணம், அத்தனை பேரும் மது போதையில் விழுந்து கிடந்துள்ளனர்..
உள்ளே இருந்த சிறுவர்கள் மற்றும் சிறுமியர் சுயநினைவின்றி மது போதையில் உளறி கொண்டிருந்தனர். உடனடியாக இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
பூட்டிய வீட்டுக்குள் மது - ஜாலி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சோதனையை மேற்கொண்டனர்.. அந்த வீட்டிற்குள் 6 சிறுமியர் மற்றும் 3 சிறுவர்கள் என மொத்தம் 9 பேர் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும், சிலர் சமீபத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை முடித்த மாணவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
உடனே அத்தனை பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. அந்த ஒன்பது பேரின் பெற்றோர்களும் உடனடியாக ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டனர்.
கலங்கிய பெற்றோர் - மாணவர்களுக்கு அட்வைஸ்
விஷயத்தை கேள்விப்பட்டுதுமே, தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற தவறான பாதையில் செல்வதை அறிந்து பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள்.. போலீஸார் அவர்களுக்கு உரிய சட்ட ரீதியான ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் வழங்கினர். குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பிள்ளைகளுடன் போதிய நேரத்தைச் செலவிடாததும், அவர்களின் மனநிலை மற்றும் நண்பர்கள் வட்டாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாததுமே இதுபோன்ற தவறுகளுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்று போலீஸார் சுட்டிக்காட்டினார்கள்..
கன்னியாகுமரி - உல்லாசம்
உரிய புத்திமதி மற்றும் அறிவுரைகளுக்குப் பிறகு, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் திருப்பூரில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இப்படியான சம்பவங்கள் நடந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. ஒரு வீட்டின் மொட்டை மாடியில் பள்ளி மாணவர்கள் சேர்ந்து, போதையை அருந்தி, மது மயக்கத்தில் விழுந்து கிடந்ததை கண்டு பெற்றோர்கள் நிலைகுலைந்தும் போனது நினைவிருக்கலாம்..
இன்றைய காலத்து பிள்ளைகள் தவறான பழக்கங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் ஆளாகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது. பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், எதிர்காலம், குறித்து இந்தப் பிரச்சனை பல விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது...!!
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications