வேளாங்கண்ணி லாட்ஜில்.. திருப்பூர் தம்பதி இருந்த கோலம்.. ஆடிப்போன ஊழியர்கள்
நாகப்பட்டினம்: திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மனைவி மீனா. இவர்கள் இரண்டு பேரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உத்திரிய மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 3-ந் தேதி மாலை முதல் தங்கி இருந்தனர். இவர்கள் லாட்ஜ் அறையில் இருந்து நீண்டநேரமாக வெளியே வரவில்லை. உள்ளே சென்று பார்த்த போது, ஊழியர்களை ஆடிப்போக வைக்கும் சம்பவம் நடந்திருந்தது.
வாழ்க்கையில் சவால்களும், நிதி நெருக்கடிகளும் வருவது இயல்பு, ஆனால் அவற்றுக்காக வாழ்க்கையை முடித்துக் கொள்வது ஒருபோதும் தீர்வாகாது. போராடிப் பெறும் வெற்றியே வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும். ஆனால் தற்கொலை என்ற முட்டாள்தனத்தை பலரும் செய்துவிடுகிறார்கள்.

பிரச்சனைகள் என்பது பொதுவாக தற்காலிகமானவை: இன்று மலையளவு தெரியும் கடன் சுமையோ அல்லது மன அழுத்தமோ சில காலங்களில் கடந்து போகக்கூடியவையாக மாறும். ஒருவரின் முடிவால் பாதிக்கப்படுவது அவரைச் சார்ந்திருக்கும் அன்பு உள்ளங்கள் தான். தற்கொலை என்பது அந்த வலியை மற்றவர்களுக்குக் கடத்திச் செல்லும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது..
பிரச்சனையை எதிர்கொண்டு வாழ்ந்து காட்டுவதே உண்மையான வீரம். வீழ்வது இயல்பு, ஆனால் விழுந்த இடத்திலேயே தங்கிவிடுவது முட்டாள்தனம் ஆகும். உயிரை விடுவதை விட, அந்தத் துணிச்சலோடு உழைத்தால் எதையும் சாதிக்க முடியும். ஆனால் பலர் தவறான முடிவெடுப்பதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் வேளாங்கண்ணியில் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி பாலன்நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் 53 வயதாகும் மனோஜ்குமார். அவருடைய மனைவி மீனா . இவர்கள் 2 பேரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உத்திரிய மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 3-ந் தேதி மாலை முதல் தங்கி இருந்தார்கள். மாதாவை தரிசனம் செய்ய பலரும் வந்து செல்வார்கள் என்பதால், இவர்களை பற்றி யாரும் சந்தேகிக்கவில்லை..
நேற்று முன்தினம் மாலை இருவரும் அறையை காலி செய்வதாக கூறி இருந்தனர். ஆனால் அறையை காலி செய்யவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று காலை அறைக்கு சென்று பார்த்தபோது உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தை கண்டனர்.
இதையடுத்து ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்த போது, மனோஜ்குமார் அறையில் இருந்த மின் விசிறியிலும், மீனா ஜன்னல் கம்பியிலும் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு ஆடிப்போனார்கள். கதவை அவர்கள் திறக்கவில்லை. மாறாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் விடுதிக்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு நாகை ஓசூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனும், மனைவியும் ஒரே அறையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வேளாங்கண்ணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications