56 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மணப்பாறை நகராட்சியைக் கைப்பற்றியது அதிமுக!
திருச்சி: மணப்பாறை நகராட்சியை முதன்முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக சார்பில் சுதா பாஸ்கரன் நகராட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் திமுக அதிகமாக வென்றிருந்தது.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல இடங்களை திமுக கட்சி கைப்பற்றியது. மணப்பாறை நகராட்சியில் திமுக மற்றும் அதிமுக சமமான வெற்றிகளைப் பெற்றது.

மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிக்கும் கடும் போட்டியில் முதல் முறையாக அ.தி.மு.க வசமானது. மணப்பாறை நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 11 இடங்களிலும், அதிமுக 11 இடங்களிலும் வெற்றி பெற்று சமபலத்தடன் இருந்தது.

சுயேட்சைகள்
இதில் வெற்றி பெற்ற 5 சுயேட்சைகள் தீர்மானிப்பவர்களே மணப்பாறை நகராட்சியை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு கீதா.மைக்கேல்ராஜ் என்பவரும், அதிமுக சார்பில் சுதா பாஸ்கரன் போட்டியிட்டனர்.

வெற்றி
மறைமுக தேர்தலில் மொத்தம் பதிவான 27 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் 15 வார்டுகளில் திமுக வேட்பாளர் 12 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த சுதா பாஸ்கரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். சுமார் 56 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மணப்பாறை நகராட்சி அதிமுக கைப்பற்றியுள்ள நிலையில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டாட்டம்
மணப்பாறையில் சுயேட்சைகள் உதவியுடன் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து சுதா பாஸ்கரன் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மணப்பாறை நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, தெற்கு மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, முன்னாள் நகர செயலாளர் ஷரீப் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வெடி வெடித்து இனிப்புகளை வழங்கினார்கள்.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications